தமிழகம்

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

உயர் நீதிமன்றத்தில் குவியும் தேர்தல் வழக்குகள்

செய்திப்பிரிவு

சென்னை: திருச்சி கிழக்கு தொகு​தி​யில், தவெக தலை​வரும், முதல்வரு​மான விஜய் வெற்றி பெற்​றதை எதிர்த்து திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் விஜய், தன்னை எதிர்த்து போட்​டி​யிட்ட திமுக வேட்​பாளரை விட 27,416 வாக்​கு​கள் கூடு​தல் பெற்று வெற்றி பெற்​றார்.

அவரது வெற்​றியை எதிர்த்​து, திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ் சார்​பில் வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​சன் வில்​சன், சென்னை உயர் நீதி​மன்​றத் ​தில் தேர்​தல் வழக்கு தாக்​கல் செய்​துள்​ளார்.

அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: 18 வயதுக்கு குறை​வான குழந்​தைகளை வைத்து விஜய் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். வேட்பு மனு​வில் வரு​மானவரி பாக்கி இல்லை எனக் கூறி​யுள்​ளார்.

வரு​மானவரி வழக்கு நிலு​வை​யில் உள்​ளதை மறைத்​துள்​ளார். அதி​கள​வில் செலவு செய்து வெளி​நாட்​டினர் மூலம் பிரச்​சா​ரம் செய்​துள்​ளார். கட்சி அடை​யாளங்​களை அணிந்​து சென்று முட்டி போட்டு தேவால​யத்​தில் பிரச்​சா​ரம் செய்​தார்.

தேர்தல் செலவு கணக்கு

தேர்​தல் செலவு கணக்கு விவரங்​களை இது​வரை தாக்​கல் செய்​ய​வில்​லை. ரூட் சமூக வலை​தளம் மூலம் பிரச்​சா​ரத்​துக்கு எவ்​வளவு செலவு செய்​தார் என்ற விவரங்​களை இது​வரை தெரிவிக்​க​வில்​லை. இதே​போல பல்​வேறு முறை​கேடு​கள் செய்து வெற்றி பெற்​றுள்​ள​தால் அவரது வெற்​றியை செல்​லாது என அறிவிக்க வேண்​டும்.

திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை அவர் ராஜி​னாமா செய்​துள்​ள​தால் என்னை வெற்றி பெற்​றவ​ராக அறிவிக்க வேண்​டும். தேர்​தல் வழக்கு முடி​யும் வரை இடைத்​தேர்​தல் அறிவிக்​கக் கூடாது. இவ்​வாறு மனு​வில் கூறி​யுள்​ளார்.

குவி​யும் வழக்​கு​கள்

இதே​போல், கோபி​செட்​டிப் ​பாளை​யம் தொகு​தி​யில் வெற்றி பெற்ற தவெகவைச் சேர்ந்த அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் வெற்றி பெற்​றது செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அதி​முகவைச் சார்ந்த வி.பி.பிரபு, தேர்​தல் வழக்கை தாக்​கல் செய்​தார்.

அந்த மனு​வில், ‘‘வேட்​புமனு​வில், சொத்​து, குற்ற வழக்கு விவரங்​கள் தெரிவிக்​கும் பிர​மாண பத்​திரத்​தில் தகவல்​களை சான்​றளித்து கையெழுத்​திட்​டுள்ள நோட்​டரி வழக்​கறிஞரின் உரிமம் காலா​வ​தி​யாகி விட்​டது.

அதனால் அந்த வேட்​பு மனுவை ஏற்​றது முறையற்​றது என்​ப​தால், செங்​கோட்​டையன் வெற்றி பெற்​றதை செல்​லாது என அறிவிக்க வேண்​டும்’’ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

லீமா ரோஸுக்கு எதிராக...

லால்​குடி தொகு​தி​யில், தவெக வேட்​பாளரை​விட 2,739 வாக்​கு​கள் அதி​கம் பெற்​று, வெற்றி பெற்ற அதி​முக எம்​எல்ஏ லீமா ரோஸின் வெற்​றியை எதிர்த்​து, அத்​தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிட்ட வேட்​பாளர் பாரிவள்​ளல் தேர்​தல் வழக்கு தாக்​கல் செய்​துள்​ளார்.

அந்த மனு​வில், ‘‘7 நிறு​வனங்​களில் தனக்​குள்ள பங்​கு​கள் குறித்த விவரங்​களை லீமா ரோஸ் மறைத்​துள்​ளார். அதி​முக துண்டு அணிந்து கொண்​டு, தேவால​யங்​களில் பிரச்​சா​ரம் செய்​தார்’’ என கூறப்​பட்​டுள்ளது.

புதுக்​கோட்டை தொகு​தி​யில், 1,867 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தி​முக எம்​எல்ஏ முத்​து​ராஜா​வின் வெற்​றியை எதிர்த்து தவெக வேட்​பாளர்​ ஷெரீப்​, தேர்​தல்​ வழக்​கு தாக்​கல்​ செய்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT