மயிலாப்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் த.வேலு. | படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

மயிலாப்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக - பாஜக வேட்பாளர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக த.வேலு எம்​எல்ஏ மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்​ளார்.

அப்​போது, ஏற்​க​னவே செய்து கொடுத்த மழை நீர்​வடி​கால்வாய் பணி, நகர்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரியத்​தின் மூலம் வீடு கட்​டிக் கொடுத்​தது, கோயில்​களில் குட​முழுக்கு செய்து கொடுத்​தது, ஆதர​வற்​றோர் தங்​கும் விடுதி கட்​டிக் கொடுத்​தது, விளை​யாட்டு மைதானங்​கள் புதுப்​பித்​துக் கொடுத்​தது உள்பட பல்​வேறு நலத்​திட்ட பணி​களை கூறி வாக்கு சேகரித்து வரு​கிறார்.

          

மேலும், மயி​லாப்​பூர் தொகு​தியை ஆன்​மிக சுற்​றுலா மைய​மாக மாற்​று​வேன். பட்டா இல்​லாத வீடு​களுக்கு பட்டா வழங்​கப்​படும். மீனவர்​களுக்கு தரமான மீன் அங்​காடி அமைத்​துக் கொடுப்​பேன்.

இடிக்​கப்​படும் குடிசை மாற்​று​வாரிய வீடு​களுக்கு அதே இடத்​தில் புதிய வீடு​கள் கட்​டித் தரப்​படும். மக்​களின் அடிப்​படை வசதி​கள் அனைத்​தை​யும் செய்து கொடுத்து மயி​லாப்​பூர் தொகு​தியை தமிழகத்​தில் நம்​பர் ஒன் தொகு​தி​யாக மாற்​றிக் காட்​டு​வேன் என உறுதி அளித்து த.வேலு வாக்கு சேகரித்து வரு​கிறார்.

இதுகுறித்து, அவரிடம் கேட்​ட​போது, உதயசூரியனுக்கு கடந்த முறையை விட இந்த முறை அதிக ஆதரவு உள்​ளது. இங்​கேயே பிறந்​து, வளர்ந்​து, பணி செய்​து, வெற்றி பெற்று செய்து முடித்த நலத்​திட்ட பணி​களை எடுத்​துக் கூறி வாக்கு கேட்​கிறேன். எனவே, இந்த முறை​யும் நான் மயி​லாப்​பூர் தொகு​தி​யில் வெற்றி பெறு​வது உறு​தி’ என்​றார்.

மயிலாப்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழிசை சவுந்​தர​ராஜன்

இதே​போல், மயி​லாப்​பூர் தொகு​தி​யில் பாஜக சார்​பில் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்ள தமிழிசை சவுந்​தர​ராஜன் வீதி வீதி​யாக பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கிறார்.

மயி​லாப்​பூர் தொகுதி மக்​களின் அடிப்​படை தேவை​களை பூர்த்தி செய்ய தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும்​ எடுப்​பேன்​ என உறு​தி அளித்​து தீவிர வாக்​கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்​.

SCROLL FOR NEXT