தமிழகம்

‘திமுக - அதிமுக பங்காளிகள்’ - நிர்மல் குமார் புதுத் தகவல்

செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், “ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தான் பழனிசாமி ஒரு கணக்கெல்லாம் சொன்னார். இந்த ஒரு வாரத்தில் அந்த கணக்கில் எல்லாம் நம்பிக்கை இழந்துவிட்டாரா எனத் தெரியவில்லை. கட்சியின் நிலைமையை அவர் மீண்டும் மறுவரையறை செய்யவேண்டும்.

எங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி. எங்கள் அரசியல் எதிரியுடனும், கொள்கை எதிரியோடும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டோம்.

தவெக தூய கட்சி அல்ல, கலப்படக் கட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி விமர்சித்துள்ளார். எங்கள் தலைவர் விஜய் திமுகவை தீய சக்தி என கடுமையாக பேசியதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் முந்திக் கொண்டு பதில் சொல்வது வேடிக்கையாக உள்ளது. திமுகவும் அதிமுகவும் அரசியல் பங்காளிகளாக இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT