தமிழகம்

ஆளுநர் அளித்த தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு தினத்​தையொட்டி தமிழக ஆளுநர் ஏற்​பாடு செய்த தேநீர் விருந்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள் மற்​றும் திமுக கூட்​டணி கட்​சிகள் புறக்​கணித்​தன.

ஒவ்​வோர் ஆண்​டும் குடியரசு தினத்​தன்று ஆளுநர் மாளி​கை​யில் முக்​கிய பிர​முகர்​கள் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்​பது வழக்​கம்.

          

அந்த வகை​யில், 77-வது குடியரசு தினம் நேற்று கொண்​டாடப்​பட்ட நிலை​யில் கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி மாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்​துக்கு ஏற்​பாடு செய்​திருந்​தார்.

இதையொட்டி தமிழக முதல்​வர், அமைச்​சர்​கள், முக்​கிய பிர​முகர்​கள், மற்​றும் அரசி​யல் கட்சிதலை​வர்​களுக்கு ஆளுநர் மாளிகை சார்​பில் முன்​கூட்​டியே அழைப்பு அனுப்​பப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், முன்பே அறி​வித்​திருந்​த​படி முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்​கணித்​தனர். அதே​நேரத்​தில் தமிழக அரசு சார்​பில் தலை​மைச் செயலர் என்​.​முரு​கானந்​தம் பங்​கேற்​றார்.

சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிப​தி​கள் கலந்​து​கொண்​டனர். ஏற்​கெனவே அறி​வித்​த​படி, திமுக மற்​றும் காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக உள்​ளிட்ட திமுக கூட்​டணிக் கட்​சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்​கணித்​தன.

அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​சர்​கள் டி.ஜெயக்​கு​மார், ப..வளர்​ம​தி, பா.பெஞ்​சமின், பாஜக சார்​பில் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தேமு​திக சார்​பில் அக்​கட்​சி​யின் பொருளாளர் எல்​.கே.சுதீஷ் மற்​றும் தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், ஐஜேகே நிறு​வனர் பாரிவேந்​தர், புதியநீதிக் ​கட்​சி​யின் தலை​வர் ஏ.சி.சண்​முகம், புதிய தமிழகம் கட்​சி​யின் நிறு​வனர் கிருஷ்ண​சாமி, பாமக எம்​எல்​ஏக்​கள் சிவக்​கு​மார், வெங்​கடேஸ்​வரன் உள்​ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள் விருந்​தில் கலந்​து​கொண்​டனர்.

ஆளுநர் மாளிகை சார்​பில் பள்​ளி- கல்​லூரி மாணவர்​களுக்கு பார​தி​யார் மற்​றும் இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டம் தொடர்​பாக நடத்​தப்​பட்ட கட்​டுரை போட்​டிகளில் வெற்றி பெற்​றவர்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி பரிசுகளை வழங்​கி​னார்.

மேலும், அதிக கொடி​நாள் நிதி வசூலித்து சாதனை படைத்​ததற்​காக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடேவுக்கு சுழற்​கேட​யத்தை வழங்​கி​னார்​. தொடர்ந்​து கலை நிகழ்ச்​சிகள்​ நடை​பெற்​றன.

SCROLL FOR NEXT