பிரேமலதா விஜயகாந்த்
அருப்புக்கோட்டை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கூறுகையில், 'தவெக ஆட்சி குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வாக்களித்த மக்கள்தான் கூற வேண்டும். இடைத்தேர்தலில் அனைவரும் அவரவர் கட்சிக்கு வேலைபார்த்தார்கள்.
மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாகும். அதுதான் பொற்காலம். நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்போம்' என்று கூறினார்.