தமிழகம்

தமிழகம் முழுவதும் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

புத்தாடை, பட்டாசு, இனிப்புகளை வாங்க குவிந்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் நாளை தீபாவளி கொண்​டாடப்​படும் நிலை​யில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்​வேலி உள்​ளிட்ட முக்​கிய நகரங்களின் வணிக வீதி​களில் புத்​தாடை, பட்​டாசு, இனிப்​பு​களை வாங்க மக்​கள் குவிந்​தனர்.

தீபாவளியை முன்​னிட்டு, சென்னை, கோவை உள்​ளிட்ட பெருநகரங்​களில் இயங்​கும் துணிக் கடைகளில் விதி வித​மான புத்​தாடைகள் தள்​ளு​படி விலை​யில் விற்​பனைக்கு வைக்​கப்​பட்​டிருந்​தன.

பொது​மக்​கள் கடந்த வாரம் சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமையில் ஓரளவு புத்​தாடை மற்​றும் பட்​டாசுகளை வாங்கி வைத்​திருந்​தனர்.

நேற்று தங்​கள் சொந்த ஊர்​களுக்கு புறப்​பட திட்​ட​மிட்​டிருந்த நிலை​யில், நேற்​றும் காலை முதலே துணிக்கடை மற்​றும் பட்​டாசுக் கடைகளில் மக்​கள் கூட்​டம் அலைமோதி​யது.

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி ஜவுளி விற்பனையால் களைகட்டியுள்ளது. |  படம்: ம.பிரபு |

குறிப்​பாக இனிப்பு கடைகளில் மக்​கள் குவிந்​தனர். சென்னை மற்றும் புறநகரில் பிரதான வர்த்​தக பகுதிகளான தியாக​ராய நகர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்டை, பிராட்வே, குரோம்​பேட்டை, பள்ளிக்​கரணை பகுதி​களில் சாலைகளில் மக்​கள் கூட்​டம் அலைமோதி​யது.

இதேபோன்று மதுரை விளக்​குத்​தூண், தெற்குமாசி வீதி​யிலும், கோவை டவுன்ஹால், காந்​திபுரம் மற்​றும் கிராஸ்​கட் சாலை, ஒப்​பணக்​கார வீதி, திருச்சி என்​எஸ்பி சாலை, பெரியக்​கடை வீதி, திருநெல்​வேலி நெல்லை​யப்​பர் கோயிலைச் சுற்​றியுள்ள மாடவீதி​களில் கூட்​டம் அலை மோதி​யது.

ஹோட்டல்களிலும் கூட்டம் கூடியது. காத்திருந்து உணவருந்தினர். போலீஸார்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சென்னை தீவுத்​திடலில் பட்​டாசுகள் விற்​பனையும் களை கட்டியது. இனிப்பு கடைகளி​லும் வகை வகை​யான் இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT