சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கப்பட்டது. படம்:எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

சென்னையில் 785 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் பிரச்​சார அனு​ம​தியை இணைய வழி​யில் விண்​ணப்​பித்து பெற வேண்​டும் என்று, அரசி​யல் கட்​சிகளுக்கு மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை மாவட்​டத்​தில் அமலில் இருக்​கும் தேர்​தல் நடத்தை விதி​கள் தொடர்​பாக, அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களிடம் விளக்​கும் கூட்​டம், மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தின் முடி​வில் குமரகுருபரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:சென்​னை​யில் உள்ள 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 28.30 லட்​சம் வாக்​காளர்​கள் உள்​ளனர்.

இத்​தொகு​தி​களில் 4,085 வாக்குச்சாவடிகள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. போலீஸ் மற்​றும் தேர்​தல் அலு​வலர்​கள் கொண்ட 375 மண்​டலக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

          

இந்​தக் குழுக்​கள் வாக்கு இயந்​திரங்​களை தயார் செய்​யும் பணி, வாக்கு இயந்​திரங்​களை வாக்​குச்​சாவடிக்கு அனுப்பி வைத்​தல், வாக்​குப்​ப​திவு முடிவடைந்த பின்​னர், வாக்கு எண்​ணும் மையத்​துக்கு கொண்டு செல்​லுதல் ஆகிய பணி​களை மேற்​கொள்​ளும். வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் 16,500 பேர் நியமிக்​கப்பட உள்​ளனர். இவர்​களுக்கு தொகுதி வாரி​யாக பயிற்சி அளிக்​கப்​படும்.

சென்னை மாவட்​டத்​தில் 13,634 மின்​னணு வாக்​குப்​ ப​திவு இயந்திரங்​கள், 6,349 கட்​டுப்​பாட்​டுக் கருவி​களும் சரி​பார்க்​கப்​பட்டு இருப்​பில் உள்​ளன. ஒவ்​வொரு தொகு​திக்​கும் 3 பறக்​கும் படைகள் என்ற வீதம் 48 பறக்​கும் படைகள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இவை, தேர்​தல் விதி​மீறல்​கள் ஏதேனும் இருப்​பின் அவற்றை கண்​காணித்து நடவடிக்கை எடுக்​கும்.

ஒவ்​வொரு தொகு​திக்​கும் 3 நிலை​யான கண்​காணிப்​புக் குழுக்​கள் வீதம் 48 குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த குழுக்​கள், வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​படும். தேர்​தல் விதி​மீறல்​கள் ஏதேனும் இருப்​பின் அவற்றை கண்​காணித்து நடவடிக்கை எடுக்​கும்.

ஒவ்​வொரு தொகு​திக்​கும் ஒன்று வீதம் 16 வீடியோ கண்​காணிப்பு படைகள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. கட்​சிக் கூட்​டங்​கள் நிகழ்​வு​களை இந்த படைகள் பதிவு செய்​யும். தேர்​தல் விதி​முறை​கள் ஏதேனும் இருப்​பின் நடவடிக்கை எடுக்​கும்.

ரிப்​பன் மாளி​கை​யில் மாவட்ட தேர்​தல் அலு​வலக கட்​டுப்​பாட்​டறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. அதை 18004257012 என்ற எண்​ணில் தொடர்​பு​கொண்டு விதி​மீறல் தொடர்​பாக புகார் தெரிவிக்​கலாம். ஒரு தொகு​தி​யில் ஒரு வேட்​பாளர் ரூ.40 லட்​சம் வரை செலவு செய்​ய​லாம்.

ஒவ்​வொரு செல​வினத்​துக்​கான விலைப்​பட்​டியல் அரசி​யல் கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தலுக்​காக பேரணி, கூட்​டம் நடத்த உள்ள இடங்​கள், காவல் துறை மூலம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

ஒற்​றைச்​சாளர முறை​யில் கூட்​டங்​கள் நடத்​து​வது, வாக​னங்​களை பயன்​படுத்​து​வது போன்​றவற்​றுக்கு உரிய அனு​ம​தியை சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​களிடம் இருந்து பெற்​றுக்​கொள்​ளலாம்.

வேட்​பாளர்​கள், பொதுக்​கூட்​டங்​கள், ஊர்​வலங்​கள் மற்​றும் தற்​காலிகக் கட்சி அலு​வல​கம் அமைத்​தல் போன்ற 6 வகை​யான இனங்​களுக்கு அனு​மதி பெறு​வதற்​காக இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தால் சுவிதா (Suvidha) என்ற இணை​யதளம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

https://suvidha.eci.gov.in என்ற இணை​யதள முகவரி​யில் விண்​ணப்​பிக்​கலாம். ஆர்​கே நகர், திரு​விக நகர், ராயபுரம், துறை​முகம், சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி ஆகிய 5 தொகு​தி​களுக்கு ராணி மேரி கல்​லூரி​யிலும், பெரம்​பூர், கொளத்​தூர்.

வில்​லிவாக்​கம், எழும்​பூர், ஆயிரம் விளக்கு மற்​றும் அண்ணா நகர் ஆகிய 6 தொகு​தி​களுக்கு லயோலா கல்​லூரி​யிலும், விரு​கம்​பாக்​கம், சைதாப்​பேட்​டை, தியாக​ராயநகர், மயி​லாப்​பூர் மற்​றும் வேளச்​சேரி ஆகிய 5 தொகு​தி​களுக்கு கிண்டி அண்ணா பல்​கலைக்​கழகத்​தி​லும் வாக்கு எண்​ணும் மையங்​கள் அமைக்​கப்​பட​வுள்​ளன.

தற்​போது 178 அமை​விடங்​களில் 785 வாக்குச்சாவடிகள் பதற்​ற​மான வாக்​குச் சாவடிகளாக உள்​ளன. பேனர் மற்​றும் போஸ்​டர்​கள் முற்​றி​லு​மாக தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த முறை சென்​னை​யில் 80 சதவீதம்​ வரை வாக்​குப்​ப​திவு நடை​பெறும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT