கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை எளிதில் அணைக்க முடியாததால் வானிலும், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் பரவிய புகை மண்டலம். | படம்​: ச.​கார்​த்​திகேயன் |

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை எளிதில் அணைக்க முடியாததால் வானிலும், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் பரவிய புகை மண்டலம். | படம்​: ச.​கார்​த்​திகேயன் |

மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை அலட்சியம்: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லை

Published on

சென்னை: மாநக​ராட்​சி​யின் திடக்​கழிவு மேலாண்​மைத் துறை அலட்​சி​யம் மற்​றும் சரி​யான மேலாண்மை செய்​யாத​தால் கொடுங்கையூர் குப்பை கிடங்​கில் கடந்த மார்ச் 14-ம் தேதி ஏற்​பட்ட தீ விபத்​தின்​போது, தீயணைப்பு வாக​னங்​கள் செல்ல முடி​யாமல், தீயணைப்பு வீரர்​கள் திரும்பி வந்​துள்​ளனர்.

சென்னை மாநகரில் தின​மும் 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட டன் குப்​பை சேகரிக்​கப்​படு​கின்​றது. மாநக​ராட்​சி​யின் 1 முதல் 8-வது மண்​டலம் வரை கொடுங்கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தி​லும், 9 முதல் 15-வது மண்​டலம் வரை பெருங்​குடி​ குப்பை கொட்​டும் வளாகத்​தி​லும் குப்​பை கொட்​டப்​பட்டு வரு​கிறது.

கொடுங்கையூர் குப்பை கொட்​டும் வளாகம் 333 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. இதில் 252 ஏக்​கர் பரப்​பள​வில் திடக்​கழி​வு​கள் கொட்​டப்​பட்​டுள்​ளன. அங்கு ரூ.641 கோடி​யில் திடக்​கழி​வு​கள் பயோ மைனிங் முறை​யில் பிரித்​தெடுக்​கும் பணி 2024-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கின்​றன.

அகற்​றப்பட வேண்​டிய 66.52 லட்​சம் டன் திடக்​கழி​வு​களில் இது​வரை 27 லட்​சம் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்​டு, சுமார் 6 ஏக்​கர் நிலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு முன்பு கொடுங்கையூர் குப்பை கொட்​டும் வளாகம் கேட்​பாரற்று கிடக்​கும்.

கோடை காலத்​தில் அப்​பகு​தியை சுற்​றி​யுள்ள குப்பை சேகரிப்​போர், குப்​பையை கொளுத்​தி, ஒயர்​களில் உள்ள உலோகங்​களை சேகரிப்​பது வழக்​கம். அண்​மைக் கால​மாக குப்பை கொட்​டும் வளாகங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, 24 மணி நேர​மும் கண்​காணிக்​கப்​படு​கிறது.

குப்​பை​யில் சிறு தீ ஏற்​பட்​டாலும், தீயணைப்பு துறை உதவி​யுடன் தீயை அணைப்​ப​தற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. போது​மான நீர் இருப்​பும் உள்​ளது என மாநக​ராட்சி நிர்​வாகம் கூறி வரு​கிறது.

அது​மட்​டுமல்​லாது, குப்பை கொட்​டும் வளாகத்​தில் இருந்து சுமார் 500 மீட்​டர் தொலை​வு​க்குள் கொருக்​குப்​பேட்டை மற்​றும் வியாசர்​பாடி சத்​தி​யமூர்த்தி நகர் ஆகிய தீயணைப்பு நிலை​யங்​களில் இருந்து 3 நிமிடத்​துக்​குள் தீயணைப்பு வாக​னங்​கள் வந்​து​விட முடி​யும்.

தற்​போது பழைய குப்​பையை அகழ்ந்​தெடுக்​கும் பணி​கள் நடை​பெறு​வ​தால், அங்கு தொழிலா​ளர்​களும் பணி​யில் இருப்​பர். இந்​நிலை​யில், கொடுங்கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் கடந்த மார்ச் 14-ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்​பட்​டு, வானமே புகை மண்​டல​மாக மாறியது.

இந்த தீ விபத்​தால் ஏற்​பட்ட புகை​யால், இந்த வளாகத்​தின் மேற்கு பகு​தி​யில் உள்ள குடி​யிருப்பு பகு​தி​களில் புகை நாற்​றத்​தா​லும், கருந்​துகள்​கள் விழுந்​த​தா​லும் பொது​மக்​கள் சிரமத்​துக்​குள்​ளா​யினர். தீ விபத்து ஏற்​பட்ட இடத்​தில் தீயணைப்பு வாக​னங்​களே செல்ல முடி​யாதநிலை இருந்​துள்​ளது.

இதனால் தீயை அணைக்​காமல் தீயணைப்பு வீரர்​கள் திரும்​பினர். அங்கு குப்​பையில் தீ விபத்து ஏற்​பட்​டால், வாக​னங்​கள் எளி​தில் செல்ல எந்த மேலாண்​மை​யும் மாநக​ராட்சி திடக்​கழிவு மேலாண்மை துறை​யால் செய்​யப்​பட​வில்​லை. இந்த விவ​காரத்​தில் மாநக​ராட்​சி​யின் திடக்​கழிவு மேலாண்​மைத் துறை மற்​றும் உயர​தி​காரி​கள் மெத்​தன​மாக செயல்​பட்​டுள்​ளனர்.

ஒரு​வேளை தீ விபத்து பெரிய​தாக இருந்​திருந்​தால், காற்​றின் போக்கு மாறி​யிருந்​தால் நிச்​ச​யமாக அப்பகுதியில் மக்​களுக்கு சுவாச பாதிப்பு ஏற்​பட்டு உயி​ரிழப்பு நிகழ்ந்திருக்​கும் என வட சென்னை குடி​யிருப்​போர் நல சங்​கத்​தினர் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

பின்​னர் மாநக​ராட்​சி​யின் பொக்​லைன் இயந்​திரங்​களை கொண்டு பல மணி நேரம் போராடி தீயை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். இனி வரும் காலங்​களிலா​வது தீ தடுப்பு மேலாண்​மையை மாநக​ராட்சி முறை​யாக செய்ய வேண்​டும் என்​பது அப்​பகு​தி​யில் வசிக்​கும் பொது​மக்​களின் கோரிக்​கை​யாக உள்​ளது.

<div class="paragraphs"><p>கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை எளிதில் அணைக்க முடியாததால் வானிலும், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் பரவிய புகை மண்டலம். | படம்​: ச.​கார்​த்​திகேயன் |</p></div>
ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஜகாத், பித்ரா பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது: ஐயுஎம்எல் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in