தமிழகம்

சென்னையில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வை தொகு​தி​களில் நடை​பெறும் ஆயத்​தப் பணி​கள் குறித்​து, தேர்தல் பார்​வை​யாளர்​கள் உடனான ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

மாவட்ட தேர்தல் அலு​வலரும், சென்னை மாநக​ராட்சி ஆணை​யரு​மான குமரகுருபரன் தலை​மை​யில் நடை​பெற்ற இக்​கூட்​டத்​தில், பொது பார்​வை​யாளர்​கள், செல​வின பார்​வை​யாளர்​கள் மற்​றும் காவல் பார்​வை​யாளர் ஆகியோர் கலந்து கொண்​டனர்.

          

இக்​கூட்​டத்​தில் தொகு​தி​வாரி​யான வாக்​காளர்​கள் எண்​ணிக்​கை, வாக்​குப்​ப​திவு மையங்​கள், பதற்​ற​மான, மிக​வும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகள் குறித்த ஆய்​வு, நிலை​யான கண்​காணிப்பு குழுக்​கள், பறக்​கும் படைகள், வீடியோ கண்​காணிப்பு குழுக்​களின் செயல்​பாடு​கள் மற்​றும் பறி​முதல் செய்​யப்​பட்ட பணம், பொருட்​கள் குறித்த விவரங்​கள்.

சி-விஜில் செயலி, சுவிதா செயலிகள் மூலம் பெறப்​பட்ட புகார்​கள் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. மேலும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், கட்​டுப்​பாட்​டுக் கருவி​கள், விவிபேட் இயந்​திரங்​களின் இருப்பு மற்​றும் தயார் நிலை.

தேர்தல் விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் குறித்​தும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. இந்​தக் கூட்​டத்​தில் கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள், தேர்தல் நடத்​தும் அலு​வலர்​கள் உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT