பெங்களூருவில் பலத்த மழை சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 30 விமானங்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பெங்​களூரு​வில் நேற்​று​முன்​தினம் இரவு கனமழை காரண​மாக, வான்​வழிப் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டது. பெங்​களூரு விமான நிலை​யத்​தில் தரை​யிறங்க வேண்​டிய சுமார் 30 விமானங்கள் சென்​னைக்​குத் திருப்பி விடப்​பட்​ட​தால் பயணி​கள் தவித்​தனர்.

பெங்​களூரு மற்​றும் சுற்று வட்​டார பகு​தி​களில் நேற்​று​முன்​தினம் இரவு இடி, மின்​னலுடன் கூடிய கனமழை கொட்​டியது. சூறாவளி காற்று பலமாக வீசி​ய​தால் விமானங்​களை இயக்க முடி​யாத சூழல் ஏற்​பட்​டது.

பெங்​களூரு விமான நிலை​யத்​துக்கு வந்த உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச விமானங்கள் பல மணி நேர​மாக வானிலேயே வட்​டமடித்​தன. எரிபொருள் பற்​றாக்​குறை மற்​றும் பாது​காப்பு கரு​தி, அவை சென்​னை, ஐதரா​பாத், கோவை மற்​றும் திருச்சி ஆகிய நகரங்​களுக்​குத் திருப்பி விடப்​பட்​டன.

அதன்​படி, அபு​தாபி, பாங்​காக், மலேசியா போன்ற சர்​வ​தேச நகரங்​களில் இருந்​தும், டெல்​லி, மும்​பை, ஜெய்ப்​பூர், கொல்​கத்​தா, புவனேஸ்​வர், அகம​தா​பாத், பாட்​னா, அமிர்​தசரஸ், நகர், ஐதரா​பாத் போன்ற உள்​நாட்டு நகரங்​களில் இருந்​தும் வந்த 30-க்​கும் மேற்​பட்ட விமானங்கள் சென்னை விமான நிலை​யத்​தில் ஒன்​றன்​பின் ஒன்​றாகத் தரை​யிறக்​கப்​பட்​டன.

நள்​ளிரவு நேரம் என்​ப​தால் பயணி​கள் அனை​வரும் விமானத்​திலேயே அமர வைக்​கப்​பட்​டனர். அவர்​களுக்​குத் தேவை​யான குடிநீர் மற்​றும் சிற்​றுண்​டிகளை அந்​தந்த விமான நிறு​வனங்​கள் வழங்​கின.

நள்​ளிர​வுக்​குப் பிறகு பெங்​களூரு​வில் வானிலை சீரானதை அடுத்​து, சென்​னை​யில் காத்​திருந்த 30 விமானங்​களும் மீண்​டும் ஒன்​றன்​பின் ஒன்​றாகப் பெங்​களூரு நோக்​கிப் புறப்​பட்​டுச் சென்​றன. இதனால், சென்னை விமான நிலை​யத்​தில் நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு பரபரப்பு ஏற்​பட்​டது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in