சென்னை: தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார்.
அதன்படி, இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு மாநில கட்சியின் துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகிப்பார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் திருமலைசாமி, ராஜலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவகாமி பரமசிவம், குப்புராமு உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவை நயினார் நாகேந்திரன் அறிவித்து உள்ளார்.