தமிழகம்

விரைவு ரயில்களில் தூய்மைப் பணியை கண்காணிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பயணி​களின் புகாரை தொடர்ந்​து, நெடுந்​தொலை செல்​லும் 11 விரைவு ரயில்​களில் தூய்மைப் பணி​களை கண்​காணித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே கோட்ட மேலா​ளர்​களுக்கு ரயில்வே வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனைக் குழு முன்​னாள் உறுப்​பினர் ஜாபர் அலி கூறிய​தாவது: திப்​ரூகர் - கன்​னி​யாகுமரி ரயில் உள்பட 11 விரைவு ரயில்​களில் தூய்​மைப் பணிகளை கண்​காணித்து நடவடிக்கை எடுக்க கோட்ட மேலா​ளர்​களுக்கு ரயில்வே வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

மேற்​கண்ட ரயில்​களில் சுத்​த​மான கழிப்​பறை​கள், உடனுக்​குடன் குப்​பைகளை அகற்​று​தல், தண்​ணீர் வசதி போன்​றவற்றை பயணம் முழு​வதும் உறுதி செய்ய அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT