தமிழகம்

பேரறிவாளனின் பாஸ்போர்ட் குறித்து 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், பாஸ்போர்ட் வழங்கக் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தார்.

2 ஆண்டுகள் கடந்தும், பாஸ்போர்ட் வழங்காததால், அதன்மீது விரைந்து முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘பாஸ்போர்ட் கோரும் பேரறிவாளனின் விண்ணப்பத்தை தாம்பரம் பாஸ்போர்ட் அதிகாரி 4 வார காலத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT