தமிழகம்

போதைப் பொருளால் உயிரிழப்பு நிகழ்ந்தால் சஸ்பெண்ட்: காவல் ஆய்வாளர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள் உட்​கொண்​ட​தால் யாராவது உயி​ரிழக்​கும் சம்​பவம் நிகழ்ந்​தால், சம்​பந்தப்​பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடைநீக்​கம் செய்​யப்​படுவார் என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் எச்​சரித்​து உள்​ளார்.

இது​தொடர்​பாக மண்​டல ஐஜிக்​கள், காவல் ஆணை​யர்​கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அவர் பிறப்​பித்த உத்​தரவு: தமிழகம் முழு​வதும் போதை பொருள் புழக்​கத்​தைக் கட்​டுப்​படுத்த கடும் நட​வடிக்​கைகள் எடுக்​கப்​பட வேண்​டும்.

குறிப்​பாக, போதைப் பொருள் உட்​கொண்​ட​தால் யாராவது உயி​ரிழக்​கும் சம்​பவம் நிகழ்ந்​தால், சம்​பந்​தப்​பட்ட காவல் நிலைய ஆய்​வாளர் பணியிடைநீக்​கம் செய்​யப்​படுவார்.

அதேபோல, சம்​பந்​தப்​பட்ட காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகுதி​களில் மத்​திய விசா​ரணை அமைப்​பு​கள் போதைப் பொருட்​களை கைப்​பற்​றினாலும், அந்த காவல் நிலை​யத்​தின் பொறுப்பு அதி​காரியான ஆய்​வாளர் பணியிடைநீக்கம் செய்​யப்​படுவார். மெத்​தனமாகச் செயல்​படும் அதி​காரி​கள் மீது நட​வடிக்கை எடுக்​கப்​படும்.

குற்​றங்​களைத் தடுக்​கும் முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கை​யாக, பொது​மக்​களின் கண்​களுக்​குத் தெரியும் வகை​யி​லான ‘விஷுவல் போலீ​ஸிங்’ கண்​காணிப்பு பணிகளை அதி​கரிக்க வேண்​டும். மாவட்ட அளவிலும் சோதனைகள், தேடுதல் நட​வடிக்​கைகளை நடத்த வேண்​டும்.

இந்த உத்​தரவின்பேரில் எடுக்​கப்​பட்ட நட​வடிக்​கைகள் குறித்த செயல் அறிக்கையை டிஜிபி அலு​வல​கத்​துக்கு மின்​னஞ்​சலில் அனுப்ப வேண்​டும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT