விஜயபாஸ்கர் ஆஜராக அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

விஜயபாஸ்கர் ஆஜராக அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
Updated on: 
1 min read

சென்னை: சொத்து குவிப்பு வழக்​கில் முன்​னாள் அமைச்​சரும் தவெக புதுக்​கோட்டை மாவட்ட அமைப்புச் செய​லா​ள​ரு​மான சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்​கத் துறை மீண்​டும் சம்​மன் அனுப்பி உள்ள நிலை​யில், நவ.18-ம் தேதி ஆஜராக உத்​தர​விட்​டுள்​ளது.

அதிமுக ஆட்​சிக் காலத்​தில் சுகாதா​ரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்​கர் மீது வரு​மானத்​துக்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​தது மற்​றும் குட்கா முறைகேடு தொடர்​பாகப் புகார்​கள் எழுந்​தன.

இதன் அடிப்​படை​யில், கடந்த 2021-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் விஜயபாஸ்கருக்​குச் சொந்​த​மான இடங்​களில் சோதனை நடத்​தினர். தொடர்ந்து, அமலாக்​கத் துறையும் விஜயபாஸ்கர் மற்​றும் அவரது மனைவி ரம்​யாவிடம் விசா​ரணை நடத்தி வந்தது.

இந்​நிலை​யில், ரூ.35.79 கோடி சொத்​துக் குவிப்பு வழக்கு தொடர்​பான விசா​ரணைக்கு நவ.6-ம் தேதி ஆஜராக விஜயபாஸ்​கர் மற்​றும் அவரது மனைவிக்​கு அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யிருந்​தது.

ஆனால், இருவரும் ஆஜராக​வில்லை. இதுகுறித்து இரு​வரிடமும் அமலாக்​கத் துறை விளக்​கம் கேட்​டுப் பெற்​றதாகக் கூறப்​படு​கிறது.

இதனைத் தொடர்ந்து, விஜயபாஸ்​கர் நவ.18-ம் தேதி​யும், அவரது மனைவி 19-ம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்​டும் சம்​மன் அனுப்பியுள்​ள​தாகத் தகவல் வெளியாகி​யுள்​ளது. இம்முறை இருவரும் ஆஜராவார்​கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயபாஸ்கர் ஆஜராக அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
ஆண்டுதோறும் 400 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

X