சந்தீப் ராய் ரத்தோர்

 
தமிழகம்

நேரடி உயர் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்: டிஜிபி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நேரடி உயர் அதி​காரி​களின் உத்​தர​வு​களை மட்​டுமே பின்​பற்ற வேண்​டும் என போலீஸ் அதி​காரி​களுக்கு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்​தோர் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு ஏப்​.23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற உள்​ளது. தேர்​தலை நேர்​மை​யாக நடத்​தும் நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக போலீஸ் அதி​காரி​கள் உள்பட பல்​வேறு துறை அதி​காரி​கள் அடுத்​தடுத்து பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். அதன்​படி, தமிழக காவல்​துறை​யில் சட்​டம் - ஒழுங்கு டிஜிபி-​யாக சந்​தீப் ராய் ரத்​தோர், தேர்​தல் ஆணை​யத்​தால் கடந்த வியாழக்​கிழமை நியமிக்​கப்​பட்​டார்.

          

அன்​றைய தினம் இரவே பொறுப்​பேற்​றுக் கொண்ட சந்​தீப் ராய் ரத்​தோர், சட்​டம் ஒழுங்கு மட்​டும் அல்​லாமல் தேர்​தல் தொடர்​புடைய பணி​களி​லும் கவனம் செலுத்தி வரு​கிறார்.முதல் கட்​ட​மாக வீடியோ கான்​பரன்ஸ் வாயி​லாக அதி​காரி​களு​டன் ஆலோ​சனை கூட்​டம் நடத்​தி​னார். இதில், சட்​டம் ஒழுங்கு கூடு​தல் டிஜிபி, மண்டல ஐஜி-க்​கள், டிஐஜி-க்​கள், மாவட்ட எஸ்​பி-க்​கள் கலந்து கொண்​டனர். அப்​போது, அவர் பல்​வேறு உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தார்.

குறிப்​பாக, போலீஸ் அதி​காரி​கள் தங்​களுக்கு மேல் உள்ள அதி​காரி​களின் உத்​தர​வு​களை மட்​டுமே பின்​பற்ற வேண்​டும். படிநிலை முறையை மீறக்​கூ​டாது. தேவையற்ற தலை​யீடு​களைத் தவிர்க்க வேண்​டும். வெளியி​லிருந்து எந்த அதி​காரி​யா​வது கட்​டளை​யிட்​டால் அல்​லது அறி​வுறுத்​தி​னால், அதுகுறித்து என்​னிடம் தகவல் தெரிவிக்​க​வும் என கண்​டிப்​புடன் அறி​வுறுத்தி உள்​ளார். தேர்​தல் நேரத்​தில் எவ்​வித அரசி​யல் தலை​யீடு மற்​றும் அரசி​யல்​ ​சார்​பின்​றி பணி​யாற்​ற வேண்​டும்​ எனவும்​ டிஜிபி சந்​தீப்​ ​ராய்​ ரத்​தோர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT