திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய இந்து அமைப்பினர். படங்கள்: நா.தங்கரத்தினம்.

 
தமிழகம்

உச்ச நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சி: தமிழகம் முழுவதும் இருந்து குன்றத்தில் குவியும் பக்தர்கள்

துணை ராணுவ கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த கோயில் மலை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யில், மலை முழு​வதும் துணை ராணுவப்​படை​யின் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டுவரப்​பட்​டுள்​ளது. தமிழகம் முழு​வதும் இருந்து பக்​தர்​கள் திருப்​பரங்​குன்​றம் நோக்கி படையெடுக்​கத் தொடங்கி உள்​ளனர்.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என கடந்த ஆண்டு உயர் நீதி​மன்ற தனி நீதிபதி உத்​தர​விட்​டிருந்​தார். ஆனால், கடந்த திமுக ஆட்​சி​யில் அப்​போது மதுரை ஆட்​சி​யராக இருந்த பிரவீன்​குமார், உத்​தரவை நிறைவேற்​றாமல் நீதி​மன்ற அவ​மதிப்​புக்​குள்​ளானார். பின்​னர் அவர் உயர் நீதி​மன்​றத்​தில் மன்​னிப்​பும் கேட்​டார்.

அதன்​பிறகு தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்ற தனி நீதிபதி உத்​தரவை இரு நீதிப​தி​கள் அமர்​வும் உறுதி செய்து, ஒவ்​வோர் ஆண்​டும் கார்த்​திகை தீப நாளில் தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவுக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்​முறையீடு செய்​தது. இந்த ஆண்டு மட்​டும் தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வதற்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால உத்​தர​விட்​டது.

ஆனால், இந்த ஆண்​டும் தீபத் தூணில் தீபம் ஏற்​றப்​பட​வில்லை. கார்த்​திகை தீபத்​திருநாளான நவ. 24-ம் தேதி வழக்​கம்​போல் உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் அருகே உள்ள தீப மண்​டபத்​திலேயே தீபம் ஏற்​றினர். ஆட்சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா, தீபம் ஏற்​றத்​தான் அனைத்து ஏற்​பாடுகளை​யும் செய்​திருந்​த​தாகவும், அறங்​காவலர் குழு​வும், இந்து சமய அறநிலை​யத் துறையும் தீபம் ஏற்​றும் குழுவை பரிந்​துரை செய்​யாமல் தன்​னிச்​சையாக முடிவெடுத்து வழக்​க​மான இடத்​திலேயே தீபம் ஏற்​றிய​தாகவும், உச்ச நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாமல் போனதற்கு வருத்​தம் தெரி​விப்​ப​தாகவும் ஆட்சி​யர் 17 பக்க விளக்க அறிக்​கையை சமர்ப்​பித்​தார்.

இந்​நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்சி​யர், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர், மாநகர காவல் ஆணை​யர், அறங்​காவலர் குழுத் தலை​வர், அறங்​காவலர்​கள் மற்​றும் செயல் அலு​வலருக்கு எதிரான நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கு​களை நேற்று விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், சம்​பந்​தப்​பட்ட நபர்​கள் பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்ய வேண்​டும் என்​றும் அறங்​காவலர் குழுவை உடனடி​யாக இடைநீக்​கம் செய்​தும் உத்​தர​விட்​டது. மேலும், சிஆர்​பிஎப் போலீஸ் பாது​காப்​புடன் தீபத்​தூணில் இன்று (28-ம் தேதி) தீபம் ஏற்ற உத்​தர​விட்டு உள்​ளது.

உச்ச நீதி​மன்ற உத்​தரவை வரவேற்று இந்து அமைப்​பினர், பக்​தர்​கள் திருப்​பரங்​குன்​றத்​தில் திரண்டு கொண்​டாடினர். அவர்​கள் கோயில் முன்பு தேங்​காய்​களை உடைத்து பொது​மக்​களுக்கு இனிப்​பு​களை வழங்​கினர். ‘தீபம் ஏற்​று​வோம், நீதி வென்​றது, முருக​னுக்கு அரோகரா’ என்று முழக்​கமிட்​டனர்.

திருப்பரங்குன்றம் கோயில் முன் தேங்காய் உடைத்து உச்ச நீதிமன்ற உத்தரவைக் கொண்டாடிய பக்தர்கள், இந்து அமைப்பினர்.

மலை உச்​சி​யில் தர்​கா​வில் இருந்து 50 மீட்​டர் தூரத்​துக்கு அப்​பால் பக்​தர்​கள் விளக்கு ஏற்​றவும் அனுமதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. அத​னால், தமிழகம் முழு​வதும் இருந்து தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​படும் நிகழ்​வைக் காண ஆயிரக்​கணக்​கானோர் திருப்​பரங்​குன்​றத்​தில் திரள வாய்ப்​புள்​ளது. பாது​காப்​புப் பணிக்​காக துணை ராணுவத்​தினர் வரு​கிறார்​கள். கோவை, திருச்​சி​யில் இருந்து கூடுதல் துணை ராணுவத்​தினர் வர உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

திருப்​பரங்​குன்​றம் மலை முழு​வதும் தீபம் ஏற்றி முடிக்​கும் வரை துணை ராணுவத்​தினர் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டுவரப்​படு​கிறது. உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​கள் எஸ்.வைத்​தி​யநாதன், வி.பார்த்​திபன் தலை​மையில் தீபம் ஏற்​றும் நட​வடிக்​கையை மேற்​கொள்ள உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அவர்​கள்​தான் இன்று மாலை எப்​போது தீபம் ஏற்ற வேண்​டும், யாரெல்​லாம் மலை உச்​சிக்​குச் செல்ல வேண்​டும் உள்​ளிட்ட தீபம் ஏற்​று​வதற்​கான ஏற்​பாடுகளை மேற்​கொள்​வார்​கள் என்று கூறப்​படு​கிறது.

நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட மாவட்ட ஆட்சி​யர், மாநகர காவல் ஆணை​யர், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் தீபம் ஏற்​றும் செயல்​பாடுகளில் பங்​கேற்​க​மாட்​டார்​கள் என கூறப்​படு​கிறது.

போலீ​ஸாருக்கு அல்வா: இந்து அமைப்​பினர், ஊர் பொது​மக்​கள் திரண்டு கோயில் அடிவாரப் பகுதி​யில் சுவாமி தரிசனம் செய்​வதற்கு வந்​திருந்த பக்​தர்​களுக்கு இனிப்​பு​கள் வழங்​கினர். கோயில் அடிவாரத்​தில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸாருக்கு இந்து அமைப்​பினர் அல்வா வழங்​கினர். போலீ​ஸார் அதை வாங்க மறுத்து திரும்​பிக் கொண்​டனர்.

கார்த்​திகை தீபத்​திருநாளில் தீபத்​தூணில் தீபம் ஏற்​றாததால் போராட்​டத்​தில் ஈடு​பட்​டோரை குண்​டுக்​கட்​டாக தூக்​கிச் சென்று போலீ​ஸார் கைது செய்த நிலை​யில் அவர்​களை கிண்​டலடிக்​கும் வகை​யிலேயே அல்வா வாங்கி வந்து கொடுத்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT