தமிழகம்

கோயில்களின் சொத்து, வாடகை பாக்கி விவரங்களை 3 மாதங்களில் வெளியிட வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் உள்ள அனைத்து கோயில்​களின் சொத்​துகள், வாடகை பாக்கி உள்​ளிட்ட அனைத்து முக்​கிய விவரங்​களை​யும் 3 மாதங்

​களில் ​மக்​கள் பார்​வைக்கு வெளி​யிட வேண்​டும் என்று அறநிலை​யத் துறை ஆணை​யருக்கு தகவல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை திரு​வான்​மியூர் மருந்​தீஸ்​வரர் கோயிலுக்​குச் சொந்​த​மான நிலங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​கள் மற்​றும் வாடகை விவரங்​களைக் கோரி மு.ர​விசங்​கர் என்​பவர் தகவல் பெறும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் மனு தாக்கல் செய்​திருந்​தார்.

உரிய தகவல் கிடைக்​காத​தால் அவர் தொடர்ந்த 2-வது மேல்​முறை​யீட்டு வழக்​கு, மாநில தகவல் ஆணை​யர் விபிஆர் இளம்​பரிதி முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

இதைத் தொடர்ந்து அவர் பிறப்​பித்த உத்​தரவு: தமிழகத்​தில் உள்ள அனைத்து கோயில்​களின் அசையா சொத்​துகளான தோப்​பு​கள், விவ​சாய நிலங்​கள், காலி மனை​கள், குடி​யிருப்​பு​கள், வணி​கக் கட்​டிடங்​களின் முழு விவரங்​கள், கட்​டளை சொத்​துகள், தற்​போதைய குத்​தகை​தா​ரர்​களின் பெயர்​கள், குத்​தகை முடி​யும் காலம், வாடகை​தா​ரர் விவரம், நிலு​வைத் தொகை போன்​ற வற்றை வெளிப்​படையாக அறிவிக்க வேண்​டும்.

கோயில் வைப்பு நிதி, வங்கி விவரம், நிரந்தர சேமிப்​புக் கணக்கு எண், உலோகப் பொருட்​கள், நன்​கொடைகள், வரவு - செலவு கணக்கு பதிவேடு, தணிக்கை அறிக்​கை, அறங்​காவலர் குழு தீர்​மானங்​களை​யும் வெளி​யிட வேண்​டும்.

இதுத​விர, சேவைக் கட்​ட​ணங்​கள், பணி​யாளர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை கோயில்​கள், அறநிலை​யத் துறை அலு​வல​க தகவல் பலகை​யில் ஒட்ட வேண்டும்.

இணை​யத்​தி​லும் பதிவேற்​றம் செய்​ய​வேண்​டும். இந்த ஆணை கிடைத்த 90 நாட்​களுக்​குள் இதை நடை​முறைப்​படுத்த அனைத்து கோயில்​களுக்​கும் அறநிலை​யத் துறை ஆணை​யர் சுற்​றறிக்கை அனுப்ப வேண்​டும்.

உத்​தரவு செயல்​படுத்​தப்​பட்​டது தொடர்​பான ஆவணங்​களு​டன் துறை​யின் பொதுத் தகவல் அலு​வலர் நவ.30-ம் தேதி ஆணை​யத்​தில் ஆஜராகி அறிக்கை அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT