தமிழகம்

தமிழகம் முழுவதும் ரூ.125 கோடியில் தூர்வாரும் பணி: அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 13 லட்​சம் ஏக்​கர் விவ​சாய நிலங்​கள் பயன்​பெறும் வகை​யில் ரூ.125 கோடி மதிப்​பீட்​டிலான சிறப்பு தூர்​வாரும் பணி​களை நீர்​வளத் ​துறை அமைச்​சர் துரை​முரு​கன் காணொலிக் காட்சி வாயி​லாக நேற்று தொடங்கி வைத்​தார்.

தமிழகத்​தில் விவ​சாயப் பணி​கள் தடை​யின்றி நடை​பெற​வும், நீர்​நிலைகளை முறை​யாகப் பராமரிக்​க​வும் அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, நேற்று சென்​னையி​லிருந்து காணொலிக் காட்சி வாயி​லாக அமைச்​சர் துரை​முரு​கன் பெரிய அளவிலான தூர்​வாரும் திட்​டத்​தைத் தொடங்கி வைத்​தார். 13 டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் மதுரை, கோவை மண்​டலங்​களைச் சேர்ந்த 11 மாவட்​டங்​கள் என மொத்​தம் 24 மாவட்​டங்​களில் இப்​பணி​கள் நடை​பெறவுள்​ளன.

          

சுமார் 5,954.94 கி.மீ நீளத்​துக்கு ஆறுகள், கால்​வாய்​கள், ஏரி​கள் மற்​றும் வடி​கால்​கள் தூர்​வாரப்பட உள்​ளன. ரூ.125 கோடி மதிப்​பீட்​டில் மேற்​கொள்​ளப்​படும் இப்​பணி​கள் மூலம் சுமார் 13 லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் நேரடிபாசன வசதி பெறும். தூர்​வாரும் பணி​களு​டன் சேர்த்​து, வேலூர் மாவட்​டத்​தில் சுமார் ரூ.70 கோடி மதிப்​பீட்​டிலான புதிய கட்​டு​மானப் பணி​களுக்​கும் அமைச்​சர்துரை முரு​கன் அடிக்​கல் நாட்​டி​னார்.

அந்​தவகை​யில், வேலூர் மாவட்​டம் காட்​பாடி அம்​மூண்டி கிராமம் அருகே ரூ.46.44 கோடி செல​வில் புதிய தடுப்​பணை கட்ட அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. இதன்மூலம் 600.80 ஹெக்​டேர் நிலங்​கள் பயன்​பெறும். மேலும், காட்​பாடி வெப்​பாலை கிராமம் அருகே ரூ.23.08 கோடி செல​வில் புதிய தடுப்​பணை கட்​ட​வும் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. இதன் மூலம் 600 ஹெக்​டேர் நிலங்​கள் பயன்​பெறும்.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் துரை​முரு​கன் பேசியதாவது: ஜூன் மாதம் மேட்​டூர் அணை பாசனத்​துக்​காகத் திறக்​கப்​படும்​போது, தண்​ணீர் எவ்​விதத் தடை​யுமின்றி கடைமடைப் பகுதி வரை சென்​றடைய வேண்​டும். விவ​சா​யிகளின் நலன் கரு​தி, முன் எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்த ஆண்டு தூர்​வாரும்பணி​கள் முன்​கூட்​டியே தொடங்​கப்​பட்​டுள்​ளன. பொறி​யாளர்​கள் இந்​தப் பணி​களைச் செவ்​வனே கண்​காணித்​து, குறித்த காலத்​துக்​குள் தரமாக முடித்து மக்​கள்பயன்​பாட்​டுக்கு கொண்டு வரவேண்​டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்​தர​விட்​டார்.

இந்த நிகழ்​வில் நீர்​வளத்​துறைச் செய​லா​ளர் ஜெ.ஜெய​காந்​தன், தலை​மைப் பொறி​யாளர் (பொது) சு.கோ​பால​கிருஷ்ணன் மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT