தமிழகம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வங்கக்கடலில் ‘முரசு’ புயல் இன்று உருவாகிறது

ஆந்திர கடலோரப் பகுதியை நாளை நெருங்கும் என தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நிலை கொண்டுள்ள காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக மாறும். இந்த புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்​பட உள்​ளது.

இது​குறித்து இந்​திய வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்பில் கூறியிருப்பதாவது: வெள்​ளிக்​கிழமை (அக்.30) தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​கள் மற்​றும் அதை ஒட்​டிய அந்​த​மான் நிகோபார் தீவு​களில் நில​விய காற்​றழுத்​தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்வுப் பகுதி​யாக வலு​வடைந்து மதி​யம் காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலமாக வலு​வடைந்தது. இது ஆந்​திர மாநிலம் ஸ்ரீவிஜயாபுரத்​தில் இருந்து மேற்கு தென்​மேற்கே 330 கி.மீ. தொலை​விலும், சென்​னைக்கு கிழக்கு - தென் கிழக்கே 1,140 கி.மீ. தொலை​விலும் நிலை​கொண்​டிருந்​தது.

இந்த காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.1-ம் தேதி அதி​காலை​யில் ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலமாகவும், தொடர்ந்து புய​லாகவும் வலு​வடையக்​ கூடும். இப்​புயல் நவ.2-ம் தேதி மாலை ஆந்​திர கடலோரப் பகுதியை நெருங்கி வரும். இதன் காரண​மாக, நவ.2, 3 ஆகிய தேதி​களில் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் கனமழையும், அநேக இடங்​களில் லேசானது முதல் மித​மான மழையும் பெய்​யக்​கூடும். புயல் கரையை கடக்​கும்​போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்​று ​வீசும்.

ஆந்​திர கடல் பகுதி​களில் நவ. 4-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்​ப​தால், மீனவர்​கள் இப்​பகுதி​களுக்கு செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்வாறு இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. வங்​கக்​கடலில் இன்று உரு​வாகும் புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ என்ற பெயர் வைக்​கப்​பட உள்​ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியுள்​ள​தாவது: கேரள - கர்​நாடக கடலோர பகுதி​களுக்கு அப்​பால் உள்ள தென்​கிழக்கு அரபிக்​கடல் பகுதி​களில் இருந்து தெற்கு மகாராஷ்டிர கடலோரப் பகுதி​கள் மற்​றும் அதை ஒட்​டிய பகுதி​களின் மேல் நில​வும் வளிமண்​டல சுழற்சி வரை ஒரு காற்​றழுத்​தத் தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக, நவ.1-ம் தேதி வட கடலோர தமிழக மாவட்​டங்​கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், மதுரை, திருச்சி, நாமக்​கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய 6 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகுதி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும்.

நவ.2-ம் தேதி நீல​கிரி, திரு​வள்​ளூர் ஆகிய 2 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக் கூடும். ஏனைய தமிழகத்​தில் ஒரு சில இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகுதி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் நவ.1-ம் தேதி வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகுதி​களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT