தமிழகம்

2,881 மானிய உர மூட்டைகள் கடத்தல்: தனி குழு அமைத்து விசாரிக்க வேல்முருகன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக வாழ்​வுரிமை கட்​சித் தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கோய​முத்​தூர் அடுத்த மதுக்​கரை அருகே தல்​மனம்​பாறை கிராமத்​தில் தென்​னந்​தோப்​பு​களுக்கு கடந்த 4-ம் தேதி வந்த 2 லாரி​களை வழிமறித்து பார்த்​த​போது, மத்​திய அரசு விவ​சா​யிகளுக்கு மானிய விலை​யில் வழங்​கும் 500 பாரத் யூரியா மூட்​டைகள் இருந்​தன.

தகவல் அறிந்து வந்த காவல்​துறை​யினர், வேளாண்​மைத் துறையினர் உர மூட்​டைகளைப் பறி​முதல் செய்​து, தென்​னந்​தோப்​புக்கு மத்​தி​யில் இருந்த தொழிற்​சாலை​யில் ஆய்வு செய்​தனர்.

அப்​போது, யூரி​யாவை உருக்கி திரவ நிலைக்கு மாற்​றும் தொழிற்​சாலை செயல்​படு​வதும், அங்கு சுமார் 100 டன் அளவுக்கு மானிய உர மூட்டைகள் அடுக்கி வைக்​கப்​பட்​டிருந்​ததும் தெரிய​வந்​தது.

யூரி​யாவை உருக்​கி, பிளைவுட் ஒட்ட பயன்​படும் ரெசின் என்ற பசை தயாரித்து கேரளா​வுக்கு அனுப்​பியதும் கண்​டறியப்​பட்​டது. மேலும், தொழிற்​சாலை​யில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த ரூ.38.42 லட்​சம் மதிப்​புள்ள 2,637 யூரியா மூட்டைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. 7 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், தல்​மனம்​பாறை அருகே ரொட்​டிக்​க​வுண்​டனூரில் இன்​னொரு தொழிற்​சாலைக்​குள் யூரியா மூட்​டைகள் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்​ததும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இந்​தத் தொழிற்​சாலை​யில் இருந்து ரூ.3.55 லட்​சம் மதிப்​புள்ள 244 யூரியா மூட்​டைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதுதொடர்​பாக, தொழிற்​சாலை உரிமை​யாளர் முகமது ஜாபர், நில உரிமை​யாளர் பால​கிருஷ்ணன் மீது வழக்​குப் ​ப​திவு செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து வி​சா​ரணை மேற்​கொள்ள, தமிழக அரசு உயர் அலு​வலர் தலை​மை​யில் தனி குழு அமைக்க வேண்​டும் என அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT