தமிழகம்

ஆதார் அங்கீகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தமிழகம் முழுவதும் ஆவணப் பதிவில் தாமதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பதிவுத்​துறைத் தலை​வர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழகம் முழு​வதும் நவ.25-ம் தேதி (நேற்று) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஆவணப் பதிவு, ஆவணம் தாக்​கல் செய்​யும் பணிகளின்​போது, ஆதார் அங்​கீகாரத்​தில் இடையூறு ஏற்​பட்​டது.

இது​குறித்து பதிவுத் துறை​யின் அமைப்பு ஒருங்​கிணைப்​பு நிறுவனமான டிசிஎஸ்ஸிடம் விசா​ரித்​த​போது, ‘மந்த்ரா’ நிறு​வனம் மேற்​கொண்ட தொழில்​நுட்ப மேம்​பாட்டு பணி​யால் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது.

இத​னால், சார் பதிவாளர் அலு​வல​கங்​களில் ஆவணப் பதிவு பணிகளில் தாமதம் ஏற்​பட்​டது. தவிர வழக்​கத்​தைவிட குறைவான எண்​ணிக்​கை​யி​லான ஆவணங்​களே பதிவு செய்​யப்​பட்​டன.

பின்​னர், இந்த தொழில்​நுட்ப கோளாறு சரிசெய்​யப்​பட்டு, இரவு 8 மணி வரை மொத்​தம் 8,425 ஆவணங்​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. மக்​களுக்கு எவ்​வித சிரமமும் ஏற்​படாத வகை​யில் பதிவுத்​துறை தொடர்ந்து உரிய நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT