தமிழகம்

உள்ளாட்சி அமைப்புகளில் புதிய உறுப்பினர் எண்ணிக்கை: தமிழக அரசுக்கு பரிந்துரைக்க முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக எல்லை மறு​வரையறை ஆணை​யத்​தின் ஆலோ​சனைக் கூட்​டம், மாநில தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

தமிழ்​நாடு மாநில தேர்​தல் ஆணை​யர் மற்​றும் எல்லை மறு​வரையறை ஆணைய தலை​வர் பா.ஜோதி நிர்​மலா​சாமி தலை​மை​யில் நடை​பெற்ற இக்​கூட்​டத்​தில், 11 மாவட்ட ஊராட்​சிகள், 40 ஊராட்சி ஒன்​றி​யங்​கள், 177 கிராம ஊராட்​சிகளில் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டிய உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை நிர்​ண​யம் செய்​தல், அதன் தொடர்​புடைய வார்டு எல்லை மறு​வரையறை செய்​தல் ஆகியவை குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

இதைத்​தொடர்ந்து 11 மாவட்ட ஊராட்​சிகள், 40 ஊராட்சி ஒன்​றி​யங்​கள், 177 கிராம ஊராட்​சிகளில் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டிய புதிய உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கையை நிர்​ண​யம் செய்​து, அரசுக்கு பரிந்து செய்ய முடிவு செய்​யப்​பட்​டது.

இதில் ஊரக வளர்ச்சி ஆணை​யர் வே.அ​முதவல்​லி, நகராட்சி நிர்​வாக இயக்​குநர் பி.மதுசூதன் ரெட்​டி, சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT