தமிழகம்

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய டிச. 31 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் சொத்துகள் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சி.சமயமூர்த்தி, அனைத்து துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்​நாடு அரசு ஊழியர் நடத்தை விதி​களின்​படி அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் தங்​கள் அசை​யும், அசையா சொத்​துகள், கடன்​கள் மற்​றும் பிற பொறுப்​பு​கள் குறித்த விவரங்​களை ஆண்​டு​தோறும் ஆன்​லைனில் சமர்ப்​பிக்க வேண்​டும். அதன்​படி அரசு ஊழியர்​கள் 2025, டிச.31-ம் தேதி​யுடன் முடிந்த ஆண்​டுக்​கான தங்​களின் சொத்​துகள், கடன் விவரங்​களை ஐஎஃப்​ஆர்​எம்​எஸ் இணை​ய தளம் வாயி​லாக அக்​.31-க்​குள் ஆன்​லைனில் சமர்ப்​பிக்க வேண்​டுமென அறி​வுறுத்​தப்​பட்​டது.

ஊழியர்கள் கோரிக்கை: அதன்​பின் வரும் ஒவ்​வொரு ஆண்​டுக்​கான விவரங்​களை​யும் அடுத்​தடுத்த ஆண்​டு​களில் மார்ச் 31-க்​குள் சமர்ப்​பிக்​க​வும் உத்​தர​விடப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் சொத்து விவரங்​களைச் சமர்​ப்பிப்​ப​தற்​கான கால அவகாசத்தை நீட்​டிக்க வேண்​டும் என்று பல்​வேறு அரசு ஊழியர்​களின் அமைப்​பு​கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்​தன.

அதையேற்று தற்​போது கால அவகாசம் டிச.31 வரை 2 மாதங்​கள் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து தங்​களின் நிர்​வாகக் கட்​டுப்​பாட்​டில் பணி​யாற்றும் அரசு ஊழியர்​கள், நீட்​டிக்​கப்​பட்ட கால அவகாசத்​துக்​குள் சொத்து, பொறுப்பு விவரங் களை தவறாமல் சமர்ப்​பிக்க உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT