தமிழகம்

பாரத் நெட் திட்டத்தில் இணைவதற்கு தொழில்முனைவோருக்கு கால அவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் உள்ள அனைத்து கிராம ஊராட்​சிகளுக்​கும் அதிவேக இணைய வசதியை வழங்​கும் பாரத் நெட் திட்​டத்​தின் கீழ், டான்ஃபிநெட் மாவட்ட அளவி​லான பங்​காளர்​களாக விரும்​பும் தொழில்​முனை​வோர்​கள் மே 4 வரை விண்​ணப்​பிக்க கால அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின் கீழ் இயங்​கும் தமிழ்​நாடு கண்​ணாடி இழை வலை​யமைப்பு நிறு​வன​மான டான்ஃபிநெட் நிறு​வனம், பாரத்​நெட் திட்​டத்​தில் மாநிலத்​தி​லுள்ள 12,525 கிராம ஊராட்​சிகளை​யும் குறைந்​த​பட்​சம் 1 ஜிபி வேகத்​திலான ஆப்​டிகல் ஃபைபர் இணைய வசதி​யால் இணைக்​கும் பணி​களை தீவிர​மாக மேற்​கொண்டு வரு​கிறது. இந்த இணைய சேவையை வீடு​கள் மற்​றும் வணிக நிறு​வனங்​களுக்​குக் கொண்டு சேர்க்​கும் இறு​தி​நிலை இணைப்பு பணி​களுக்​காக, மாவட்ட ரீதி​யாக பங்​காளர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

இதற்​கான விண்​ணப்​பங்​களை சமர்ப்​பிக்க ஏற்​கெனவே காலக்​கெடு நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், தற்​போது திருத்​தப்​பட்ட நிதித் தகுதி அளவு​கோல்​களு​டன் விண்​ணப்​பிக்​கும் இணை​யதளம் மீண்​டும் திறக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, ஆர்​வ​முள்ள விண்​ணப்​ப​தா​ரர்​கள் மற்​றும் தொழில்​முனை​வோரின் கோரிக்​கையை ஏற்​று, விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் வரும் மே 4-ம் தேதி மாலை 6 மணி வரை நீட்​டிக்​கப்​படு​வ​தாக டான்ஃபிநெட் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இத்திட்​டத்​தின் கீழ் விண்​ணப்​பிக்க விரும்​பும் நிறு​வனங்​கள் அல்​லது தனி​நபர்​கள், அந்​தந்த மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர்​களாக இருக்க வேண்​டும். ஒரு விண்​ணப்​ப​தா​ரர் அதி​கபட்​ச​மாக 2 மாவட்​டங்​களுக்கு விண்​ணப்​பிக்​கலாம். ஏற்​கெனவே விண்​ணப்​பம் செய்து கட்​ட​ணம் செலுத்​தி​ய​வர்​கள் மீண்​டும் விண்​ணப்​பிக்​கத் தேவை​யில்​லை. கூடு​தல் பிரிவு​களுக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் மட்​டும் புதிய விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்​கலாம் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கூடு​தல் விவரங்​களை டான்ஃபிநெட் நிறு​வனத்​தின் https://tanfinet.tn.gov.in என்ற அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் தெரிந்​து​கொள்​ளலாம்​.

SCROLL FOR NEXT