தமிழகம்

சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க இறந்த ஜெயராஜின் மகள் கருத்து

செய்திப்பிரிவு

தென்காசி: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளம் காவல் நிலை​யத்​தில் போலீ​ஸா​ரால் தாக்​கப்​பட்டு தந்​தை, மகன் உயி​ரிழந்த சம்​பவத்​தில், போலீ​ஸாருக்கு உச்​சபட்ச தண்​டனை விதிக்​கப்பட வேண்​டும் என, உயி​ரிழந்த ஜெய​ராஜின் மகள் கருத்து தெரி​வித்​தார்.

சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், இவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி கரோனா ஊரடங்கு நேர கட்​டுப்​பாட்டை தாண்டி கடைதிறந்து வைத்​திருந்​த​தாகக் கூறி சாத்​தான்​குளம் போலீ​ஸார் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

          

அங்கு தந்​தை, மகன் இரு​வரை​யும் காவல் நிலை​யத்​தில் வைத்து போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கிய​தில் இருவரும் உயி​ரிழந்​தனர். இதுகுறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்​றப்​பட்டது. இந்த வழக்கு விசா​ரணை, மதுரை மாவட்ட முதலா​வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது.

விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கீழ் நீதிமன்றம் சார்பில் மேலும் 6 மாதகாலம் விசாரணை காலத்தை நீட்டிக்க அனுமதி கோரியது. இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து தினமும் விசாரணை என வழக்கு வேகமெடுத்தது.

இதன் தொடர்ச்சியாக குற்​றம் சுமத்தப்பட்ட 9 போலீ​ஸாரும் குற்​ற​வாளி​கள் என்​றும் அவர்​களுக்​கான தண்டனை 30-ம் தேதி அறிவிக்​கப்​படும் என்​றும் தெரிவித்​தது. நீதி​மன்​றத்​தின் இந்த அறி​விப்பு குறித்​து, தென்​காசி​யில் வசித்து வரும் ஜெய​ராஜின் மகள் பெர்​சியா கூறும்​போது, “சாத்​தான்​குளம் காவல்​துறை​யினர், எனது தந்தை ஜெய​ராஜ் மற்​றும் தம்பி பெனிக்ஸை அடித்து துன்​புறுத்​தி​ய​தில் இருவரும் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

எனது தந்தை மற்​றும் தம்​பி​யின் கொலை வழக்​கில் நீதி கிடைக்க வேண்​டும் என கடந்த 6 ஆண்​டு​களாக நாங்​கள் எதிர்​பார்த்து காத்​திருந்​தோம். இது​போன்று ஒரு சம்​பவம் இனி நடை​பெறாமல் இருக்க, குற்​ற​வாளி​களுக்கு உச்​சபட்ச தண்​டனை வழங்க வேண்​டும்” என்​றார்.

SCROLL FOR NEXT