தமிழகம்

வலுவிழந்து வருகிறது டிட்வா புயல்: நீலகிரி உட்பட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை

செய்திப்பிரிவு

சென்னை: வங்​கக் கடலில் நிலை​கொண்​டிருந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் அடுத்​தடுத்து வலு​விழந்து காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி​யாக மாறி​யுள்​ளது. இதனால், நீல​கிரி, ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை​யும், திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல் உட்பட 8 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக் கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு:

தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், வடக்கு திசை​யில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணி​யள​வில் வலு​விழந்து காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக நீடித்​தது. தொடர்ந்து சென்​னைக்கு கிழக்கு - தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலை​விலும், புதுச்​சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலை​விலும் நிலை​கொண்​டிருந்​தது. இது தென்​மேற்கு திசை​யில் வடதமிழகம் - புதுச்​சேரி கடலோரப் பகு​தி​களை நோக்கி நகர்ந்​து, ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி​யாக வலுகுறையக் கூடும். மேலும், காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாக வலு குறை​யும்.

இதன் காரண​மாக தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். நீல​கிரி, ஈரோடு, கோயம்​புத்​தூர் ஆகிய 3 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை​யும், திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல், தென்​காசி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, சேலம், நாமக்​கல் ஆகிய 8 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக் கூடும்.

தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய மத்​தி​யமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் திங்​கள்​கிழமை மாலை நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் தென்​-தென்​மேற்கு திசை​யில் மெது​வாக நகர்ந்து வந்​தது. இது, புதுச்​சேரிக்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலை​விலும், சென்​னைக்கு தெற்கே 80 கி.மீ. தொலை​விலும், கடலூருக்கு வடகிழக்கே 80 கி.மீ. தொலை​விலும் நிலைக்​கொண்​டிருந்​தது. இது மேலும் தென்​மேற்கு திசை​யில் வடதமிழகம்​-புதுச்​சேரி கடலோர பகு​தியை நோக்கி நகர்​கிறது. அடுத்த 12 மணி நேத்​தில் ஆழ்ந்த காற்​றழுத்​தத்​தாழ்வு பகு​தி​யாக வலு​விழக்​க​வுள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தமிழகத்​தில் நேற்று காலை 8 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக, எண்​ணூரில் 26 செ.மீ. பதி​வாகி​யுள்​ளது.      

வட தமிழகம், புதுச்​சேரி கடலோரப் பகு​தி​கள், தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல் மற்​றும் மன்​னார் வளை​குடா பகு​தி​கள், தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​கள், தென்​மேற்கு வங்​கக் கடல் மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்​. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT