கோப்புப் படம்

 
தமிழகம்

பரந்தூர் விமான நிலையத் திட்ட நிலங்களில் சாகுபடி: நெல் கொள்முதலில் சிக்கல்; விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலை​யத் திட்​டத்​துக்​காக நிலம் வழங்​கிய விவ​சா​யிகள், தற்​போது விளை​வித்​துள்ள நெல்லை அரசு கொள்​முதல் நிலை​யங்​களில் விற்​பனை செய்ய முடி​யாமல் தவித்து வரு​கின்​றனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்​துக்​காகப் பல்​வேறு கிராமங்​களைச் சேர்ந்த விவ​சா​யிகள் தங்​கள் நிலங்​களை அரசுக்கு வழங்​கி ​உள்​ளனர்.

          

இதற்​கான இழப்​பீட்​டுத் தொகை​யைப் பெற்​றுக் கொண்ட நிலை​யில், அந்த நிலங்​கள் வரு​வாய்த் துறை​யின​ரால் அரசு நிலங்​களாக மாற்​றப்​பட்​டுள்​ளன. இருப்​பினும், திட்​டப் பணி​கள் முழு​மை​யாகத் தொடங்​காத நிலை​யில், அந்த நிலங்​களில் விவ​சா​யிகள் தொடர்ந்து நெல் சாகுபடி செய்​துள்​ளனர்.

தற்​போது அறு​வடை முடிந்​து, விளை​வித்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களுக்கு விவ​சா​யிகள் கொண்டு செல்​கின்​றனர். அங்கு நெல்லை விற்​பனை செய்ய ‘அடங்​கல்’ சான்​றிதழ் கட்​டா​யம் எனக் கேட்​கப்​படு​கிறது.

நிலங்​கள் அரசு பெயருக்கு மாற்​றப்​பட்​டு​விட்​ட​தால், கிராம நிர்​வாக அலு​வலர்​களிடம் அடங்​கல் சான்​றிதழ் பெறு​வ​தில் பெரும் சிக்​கல் நீடிக்​கிறது. அரசு கொள்​முதல் நிலை​யங்​களில் விற்க முடி​யாத​தால், வேறு வழி​யின்றி தனி​யார் வியா​பாரி​களிடம் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்​டிய கட்​டா​யத்​துக்கு விவ​சா​யிகள் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

இது தங்​களுக்​குப் பெரும் நஷ்டத்தை ஏற்​படுத்​து​வ​தாக அவர்​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர். எனவே, பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டப் பகுதி விவசா​யிகள் தங்​களது நெல்லை எவ்​விதத் தடை​யுமின்றி அரசு கொள்​முதல் நிலை​யங்​களில் விற்பனை செய்ய, மாவட்ட நிர்​வாகம் சிறப்பு ஏற்​பாடு​களைச் செய்ய வேண்​டும் என பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

கிளார் கிராமத்​தில் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் நடை​பெறும் முறை​கேடு​களைத் தடுக்​கக் கோரி, தமிழ்​நாடு அனைத்து விவ​சாய சங்​கங்​களின் கூட்​டியக்​கம் சார்​பில் அதன் மாநிலத் தலைவர் கே.எழிலன் தலைமையில் நேற்று ஆட்​சி​யரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், நெல் மூட்டைகளைப் பெறுவதற்கு பணம் கேட்பது, இடைத்தரகர்கள் மூலம் முறையற்ற வசூல் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களை உழவர் உற்​பத்​தி​யாளர் குழுக்களிடம் ஒப்​படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT