நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ‘​நா​டாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​யில் தங்​களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்​டும்’ என்று மாற்​றுத் திற​னாளி​கள் முன்​னேற்​றக்​ கழக நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றவர்​களைப்​போல சுயமரி​யாதை​யுடன் வாழ வேண்​டும் என்ற நோக்​கில், மாற்​றுத் திற​னாளி முன்​னேற்​றக்​கழகம் என்ற கட்சி மதுரை​யில் மார்ச் 15-ம் தேதி தொடங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் செய்தியாளர்களிடம், இக்​கட்​சி​யின் தலை​வர் ஆர்​.​சா​முவேல்​ராஜ், பொதுச்​செய​லா​ளர் சகாய​ராஜ் ஆகியோர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் உள்ள 21 வகை​யான மாற்​றுத் திற​னாளி​கள், திருநங்​கைகள், இளம் விதவை​கள் மற்​றும் கைம்​பெண்​கள், நிலமற்ற ஏழை, விவ​சாய தொழிலா​ளர்​கள் போன்ற சமு​தா​யத்​தில் அங்​கீ​காரம் இல்​லாத விளிம்பு நிலை மக்​களை ஒருங்​கிணைத்து அவர்​களின் நலனைக் காக்​க​வும், அவர்​கள் வாழ்​வில் ஏற்​றத்​தைக் காண​வும் மாற்​றுத் திற​னாளி​கள் முன்​னேற்​றக் கழகம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

நாடாளு​மன்​றம்,சட்​டப்​பேர​வை​யில் எங்​கள் உறுப்​பினர்​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் வழங்க வேண்​டும். ஆயிரக்​கணக்​கில் உள்ள ஆங்​கிலோ இந்​தி​யர்​களுக்கு நாடாளு​மன்​றத்​தில் ஒதுக்​கீடு உள்​ளது.

ஆனால், இந்​தி​யா​வில் 3 முதல் 4 கோடி வரை வாழும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு ஒதுக்​கீடு இல்​லை. தமிழகத்​தில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் பார்​வையற்​றோருக்கு 2 தொகு​தி​கள் உள்பட 6 தொகு​தி​கள் எங்​கள் பிரிவுக்கு ஒதுக்​க வேண்​டும்.

மாற்​றுத் திற​னாளி​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள 4 சதவீதம் வேலை​வாய்ப்​பு, இடஒதுக்​கீடு அரசு,தனி​யார் துறை​யிலும் ஒவ்​வொரு ஆண்​டும் நியமனம் செய்​யப்​பட்​ட வேண்​டும்.

நாடாளு​மன்​றத்​தில் மாற்​றுத் திற​னாளி​களுக்​காக 1995-ம் ஆண்டு இயற்​றப்​பட்ட சட்​டத்தை 2016-ம் ஆண்​டில் கொண்​டு​வரப்​பட்ட திருத்​தங்​களின்​படி, அரசுகள் செயல்​படு​வதை வெளிப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்
விடுதிகளுக்கு சிலிண்டர்களை முன்னுரிமையில் வழங்க வேண்டும்: ஐ.டி. விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in