தமிழகம்

விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி: பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டதாக விவசாயிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து விவசாயிகளுக்​கும் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்​கடன் தள்​ளு​படி செய்​யப்​படும் என பேச்சு​வார்த்​தையின்​போது தமிழக அரசு உறுதி​யளித்​துள்​ள​தாக விவசாயச் சங்​கங்​கள் தெரி​வித்​துள்​ளன.

தமிழகத்​தில் விவசாயிகளின் பயிர்க்​கடன்​களைத் தள்​ளு​படி செய்ய வலியுறுத்தி பல்​வேறு விவசாயிகள் சங்​கத்​தினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

இதையடுத்து சென்னை தலை​மைச் செயல​கத்​தில், விவசாயிகள் சங்​கப் பிரதி​நி​தி​களு​டன் அரசு சார்​பில் நேற்று முன்​தினம் 4-ம் கட்ட பேச்சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் அமைச்​சர்​கள் என்.ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா, வினோத் காந்​திராஜ், ரமேஷ், விஜய் பாலாஜி ஆகியோர் பங்​கேற்​றனர். இதில் சில கோரிக்​கைகள் ஏற்​கப்​பட்​டதை அடுத்து போராட்​டத்தை வாபஸ் பெறு​வ​தாக விவசாயச் சங்​கங்​கள் அறி​வித்​துள்​ளன.

இது​குறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்​கக் கூட்​டமைப்​புத் தலை​வர் இளங்​கீரன் கூறும்​போது, “பயிர்க்​கடன் தள்​ளு​படி தொடர்​பாக அரசுடன் நடை​பெற்ற பேச்சு​வார்த்​தையில் முழு உடன்​பாடு ஏற்​பட​வில்லை. அரசு வழங்​கிய சலுகைகள் விவசாயிகளுக்கு திருப்​தி​யளிக்​க​வில்லை.

குறிப்​பிட்ட காலக்​கெடுவுக்​குள் பெறப்​பட்ட கடன்​களை மட்​டும் தள்​ளு​படி செய்​வதற்கு பதிலாக, விவசாயிகள் பெற்​றுள்ள அனைத்​துக் கடன்​களை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

அரசுக்கு நிதி நெருக்​கடி இருப்​ப​தால் வேறு வழி​யின்றி தற்​போதைய முடிவு​களை அரைமனதுடன் ஏற்று போராட்​டத்​தைத் தற்​காலிக​மாக ஒத்​திவைத்​துள்​ளோம். விவசாயிகளிடம் கடனை வசூலிக்க அரசு நெருக்​கடி கொடுத்​தால், அடுத்​தகட்​டப் போராட்​டங்​கள் தீவிரப்​படுத்​தப்​படும்” என்​றார்.

ரூ.2,228 கோடி ஒதுக்கீடு

தமிழ்​நாடு விவசாயிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்.மாசிலாமணி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “அமைச்​சர்​கள், துறை செயலர்​களு​டனான பேச்சு​வார்த்​தையில், அரசின் நிதி நெருக்​கடியைக் கருத்​தில்​கொண்டு, 2025-26-ம் ஆண்டு ஏப்​ரல் 1 முதல் மார்ச் 31 வரை கடன் பெற்ற சிறு, குறு மற்​றும் இதர விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை தள்​ளு​படி செய்​வது என்று முடிவு செய்​யப்​பட்​டது.

ஏற்​கெனவே ரூ.6,024 கோடி ஒதுக்​கப்​பட்ட நிலை​யில், தற்​போதைய அறி​விப்​பின் மூலம் கூடுதலாக ரூ.2,228 கோடி சேர்த்து மொத்​தம் ரூ.8,312 கோடி ஒதுக்​கீடு செய்​வ​தாக அரசு உறுதி​யளித்​துள்​ளது.

ஒரு குடும்​பத்​தில் ஒரு​வருக்கு மட்​டுமே கடன் தள்​ளு​படி என்ற நிபந்​தனையை நீக்கி அனைத்து விவசாயிகளுக்​கும் திட்​டத்தை விரிவுபடுத்த வேண்​டும். புதிய கடன் பெறு​வதற்​காக விவசாயிகள் ஏற்​கெனவே செலுத்​திய கடன் தொகையையும் தள்​ளு​படி​யில் சேர்க்க வேண்​டும் என்​றும் பேச்சு​வார்த்​தையில் வலியுறுத்​தப்​பட்​டது.

இது​தொடர்​பாக முதல்​வருடன் ஆலோ​சித்து உரிய நட​வடிக்கை எடுப்​ப​தாக அமைச்​சர்​கள் உறுதி​யளித்​துள்​ளனர். தற்​போதைய நிதி​நிலை​யைக் கருத்​தில்​கொண்டு எடுக்​கப்​பட்​டுள்ள முடிவை வரவேற்​கிறோம்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT