மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் | கோப்புப் படம்

 
தமிழகம்

“திரையில் பார்த்த விஜய்யை தெருவில் பார்க்க மக்கள் வந்துள்ளனர்” - பெ.சண்முகம் கருத்து

செய்திப்பிரிவு

​மார்​கசிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் சார்​பில் வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் பட்​டியல் நேற்று முன்​தினம் வெளி​யானது. இதையடுத்து தி.நகரில் உள்ள கட்சி மாநில தலைமை அலு​வல​கத்​தில், வேட்​பாளர்​களின் அறி​முக நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

அப்​போது கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக கடந்த முறை கொடுத்த வாக்​குறு​தி​களில் 90 சதவீதத்​துக்கு மேல் நிறை​வேற்​றி​யுள்​ளது. இதையடுத்து தற்​போது வெளி​யிட்ட தேர்​தல் அறிக்​கை, இது​வரை வெளிவந்​திருக்​கும் தேர்​தல் அறிக்​கை​களில் சூப்​பர் ஸ்டார் அறிக்​கை​யாக அமைந்​துள்​ளது.

          

தமி​ழ​கத்​தில் எந்​தவொரு அரசி​யல் கட்​சி​யும் மதுக்​கடைகளை மூடு​வோம் என்ற வாக்​குறு​தியை அளிக்​க​வில்​லை. பூரண மது​விலக்கு என்​பது நடை​முறை சாத்​தி​யமற்ற ஒன்​றாகும். தவெக தலை​வர் விஜய் எங்கு சென்​றால் கூட்​டம் வரும் என்​ப​தில் சந்​தேகம் இல்​லை. திரை​யில் பார்த்த நடிகர், தெரு​வுக்கு வந்​துள்​ளார் என்​ப​தற்​காக தான் மக்​கள் அவரை பார்க்க வரு​கின்​ற​னர். அவர்​கள் அரசி​யல் தலை​வர் என்​ப​தற்​காக பார்க்க வந்​தார்​களா? அல்​லது வேடிக்கை பார்க்க வந்​தார்​களா? என்​பது வாக்கு எண்​ணிக்​கை​யின் போது தான் தெரி​யும்.

அதே​நேரம் அவர் மாற்று அரசி​யல் தலை​வ​ராக​வும், ஆட்சி மாற்​றத்​திற்​கான தலை​வ​ராக​வும் தமிழக மக்​கள் கருதுகி​றார்​களா? என்று கேட்​டால் அதற்கு கடு​களவு கூட வாய்ப்பு இல்​லை. தவெக பிரச்​சா​ரத்​துக்கு காவல்​துறை முறை​யாக பாது​காப்பு கொடுக்​க​வில்லை என்​கின்​ற​னர். தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​திருக்​கும் நிலை​யில், அனைத்து கட்​டுப்​பாடு​களும் தேர்​தல் ஆணை​யத்​திடம் தான் உள்​ளது.

அவர்​களிடம் தான் நேரடி​யாக முறை​யிட்டு நிவாரணம் தேட வேண்​டும். இது கூட தெரி​யாமல் திமுக மீது குற்​றம்​சாட்​டு​கின்​ற​னர். வாழ்​நாளி​லேயே விஜய் இப்​போது தான் முதல் முறை தலைமை செயல​கம் சென்று இருக்​கி​றார் என்று நினைக்​கிறேன். திமுக​வுக்​கும், எனக்கு தான் போட்டி என்​கி​றார். ஆட்​சி​யில் பங்​கு, அதி​காரத்​தில் பங்கு என அவர் கூறிய பிறகும் அவருடன் யாரும் கூட்​ட​ணிக்கு செல்​லாததே தமி​ழ​கத்​தில் அவரை எந்த கட்​சி​யும் நம்​ப​வில்லை என்​ப​தற்கு சாட்​சி. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT