மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் | கோப்புப் படம் 
தமிழகம்

கீழ்வேளூரில் களமிறங்குகிறாரா மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம்?

கரு.முத்து

​மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ள​ரான பெ.சண்​முகம், இந்​தத் தேர்​தலில் நாகை மாவட்​டம் கீழ்​வேளூர் தொகு​தி​யில் களமிறங்​கலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கீழ்​வேளூர் (தனி) தொகு​தி​யானது திமுக, அதி​முக என எந்​தக் கூட்​ட​ணி​யாக இருந்​தா​லும் பொது​வாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கே ஒதுக்​கப்​படு​கிறது. 2011-ல் அதி​முக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகித்த மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் போட்​டி​யிட்ட நாகை மாலி வெற்றி பெற்​றார். அடுத்து 2016-ல் இதே தொகு​தி​யில் மக்​கள் நலக் கூட்​டணி சார்​பாக போட்​டி​யிட்ட மாலி, திமுக வேட்​பாள​ரான உ.ம​தி​வாணனிடம் தோற்​றுப் போனார். 2021 தேர்​தலில் திமுக கூட்​டணி சார்​பில் மீண்​டும் போட்​டி​யிட்ட நாகை மாலி வெற்றி பெற்று எம்​எல்​ஏ-​வாக உள்​ளார்.

          

இந்த முறை​யும் இந்த தொகு​தியை தங்​களுக்கு திமுக ஒதுக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் உள்​ளனர். ஆனால், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் விதிப்​படி ஒரு நபருக்கு அதி​கபட்​ச​மாக 3 முறை தான் வாய்ப்பு வழங்​கப்​படும். அந்த வகை​யில் சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான நாகை மாலிக்கு 3 முறை வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, இந்​தத் தொகுதி மார்க்​சிஸ்ட் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்​டாலும் நாகை மாலி மீண்​டும் போட்​டி​யிடு​வது சந்​தேகமே. சிறப்பு விதி​விலக்​களித்​தால் மட்​டுமே மீண்​டும் அவர் போட்​டி​யிடு​வார், இல்​லா​விட்​டால் மார்க்​சிஸ்ட்​கள் மாற்று வேட்​பாளரைத் தேட வேண்டி இருக்​கும்.

இந்​தநிலை​யில், இந்​தத் தொகு​தி​யில் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் களம் இறங்​க​வும் வாய்ப்​புள்​ளது என்​கி​றார்​கள். ஒரு​வேளை அவர் போட்​டி​யி​டா​விட்​டால் கட்​சி​யின் மாவட்ட செயற்​குழு உறுப்​பின​ரான சுபாஷ் சந்​திர​போஸ் போட்​டி​யிடலாம் என கூறப்​படு​கிறது.

மீண்​டும் திமுக-வே போட்​டி​யிட்​டால் முன்​னாள் அமைச்​சர் மதி​வாணன், கீழ்​வேளூர் தெற்கு ஒன்​றியச் செய​லா​ளர் பழனியப்​பன், ‘தாட்​கோ’ தலை​வர் இளை​ய​ராஜா ஆகி​யோரில் ஒரு​வ​ருக்கு வாய்ப்​புக் கிடைக்​கலாம் எனக் கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT