சென்னை: திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ‘நவீன மனிதர்கள்’ அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில், துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி.சுரேஷ், பொருளாளர் ஆர்.பிரகாஷ் சந்திரன், துணைப் பொருளாளர் எ.செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராஜா, சி. ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த பாரதி சுப்பராயன், திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்பராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.