தமிழகம்

சிபிஎஸ் திட்ட ஓய்வூதியருக்கு ‘டேப்ஸ்’ திட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் மாரிமுத்து வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: சிபிஎஸ் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற அனைத்து அரசு ஊழியர்​களுக்​கும் ‘டேப்​ஸ்’ ஓய்​வூ​திய திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்பட வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி உறுப்​பினர் க.மாரி​முத்து வேண்​டு​கோள் விடுத்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் அவர் பேசி​ய​து: ஊரக வளர்ச்​சித் துறை​யில் நீண்ட கால​மாக பணி​யாற்றி வரும் தற்​காலிக பணி​யாளர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். முதி​யோர் ஓய்​வூ​திய திட்​டத்​தில் விண்​ணப்​பித்தோருக்கு ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும்.

அரசு போக்​கு​வரத்​துக் கழ​க ஊழியர்​களுக்​கான ஓய்​வூ​திய திட்​டம் சரி​யாக செயல்​படுத்​தப்​பட​வில்​லை. ஓய்​வூ​திய பலன்​கள் கிடைக்க தொடர்ந்து போராடி கொண்​டிருக்​கிறார்​கள். பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டம் (சிபிஎஸ்) நடை​முறைப்​படுத்​தப்​பட்ட கடந்த 1.4.2003 முதல் 31.12. 2025 வரை பணி​யாற்றி ஓய்​வு​பெற்​றவர்​கள் ஓய்​வூ​திய பலன்​கள் கிடைக்​காதா என ஏங்​கிக் கொண்​டிருக்​கிறார்​கள்.

தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். இல்​லாத​பட்​சத்​தில் கடந்த ஜன.1 முதல் ஓய்​வு​பெற்ற ஊழியர்​களுக்கு நடை​முறைப்​படுத்​தப்​படு​வதைப் போன்​று, சிபிஎஸ் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற அனைத்துஊழியர்​களுக்​கும் தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​ட​மான டேப்ஸ் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.இவ்​வாறு பேசி​னார்.

SCROLL FOR NEXT