மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

பாஜக தேர்தல் அறிக்கை: ஆணையத்துக்கு இந்திய கம்யூ. கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழக பாஜக வெளி​யிட்ட தேர்​தல் அறிக்​கை​யில் மத உணர்வை தூண்​டும் பகு​தி​களை நீக்க வேண்​டும் என இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தை இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கோரி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் இந்​துத்​துவா அரசி​யலை ஏற்று செயல்​படும் பாஜக, தேர்​தல் ஆதா​யத்​துக்​காக மக்​களை மத ரீதி​யாக பிளவுபடுத்த தொடர்ந்து முயன்று வரு​கிறது. மக்​களின் இயல்​பான ஆன்​மீக நம்​பிக்​கை​களை​யும், உணர்​வு​களை​யும் மதவெறி அரசி​யலுக்கு அணி​திரட்​டி, மாநில அரசு அதி​காரத்தை கைப்​பற்​று​வதற்​காக பல்​வேறு முயற்​சிகளை மேற்​கொண்டு வரும் பாஜக, அதன் தொடர்ச்​சி​யாக தமி​ழ​கத்​தின் திருப்​பரங்​குன்​றம் மலையை தற்​போது குறி வைத்​துள்​ளது.

சமூக அமை​தி​யும், மத நல்​லிணக்க சூழலும் நிலவி வரும் தமி​ழ​கத்​தில், வாக்கு வங்கி அரசி​யலுக்​காக பெரும்​பான்மை மதவெறி அரசி​யலை தீவிர​மாக முன்​னெடுக்​கும் பாஜக திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​றும் பிரச்​சினையை முன்​னிறுத்தி தேர்​தல் அறிக்​கையை தயார் செய்து வெளி​யிட்​டுள்​ளது. திருப்​பரங்​குன்​றத்​தில் மதக்​கல​வரத்தை தூண்ட முயன்ற பாஜக, அதை தேர்​தல் அறிக்​கை​யிலும் முன் வைத்​திருக்​கிறது.

இதுதொடர்​பான வழக்கு உச்​சநீ​தி​மன்ற விசா​ரணை​யில் இருக்​கும் நிலை​யில், வழி​பாட்டு தலங்​கள் சட்​டத்​துக்கு எதி​ராக​வும், அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ராக​வும், மதத்​தை​யும், மத உணர்​வு​களை​யும் தேர்​தல் பரப்​புரை​யில் பயன்​படுத்​தக் கூடாது என்​கிற மாதிரி தேர்​தல் நடத்தை விதி​முறை​களுக்கு எதி​ராக திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்தை தேர்த்ல் அறிக்​கை​யில் பாஜக வைத்​திருப்​பது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம், பாஜக​வின் தேர்​தல் அறிக்கையில் மத உணர்​வு​களை தூண்​டும் பகு​தி​களை நீக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கோரி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT