மு. வீரபாண்டியன் |கோப்புப் படம் 

 
தமிழகம்

சிலவற்றை கேட்போம்.. சிலவற்றை தவிர்ப்போம்.. - வீரபாண்டியன் நெளிவுசுளிவு

செய்திப்பிரிவு

திமுகவிடம் சிலவற்றை கேட்போம்.. சிலவற்றை தவிர்ப்போம்.. என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மு.வீரபாண்டியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவின் வாக்குகளை கனிசமாக பிரிக்கும் என்று டி.டி.வி.தினகரன் குறிப்பிடுவது முற்றிலும் தவறான கூற்று. சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் காரல் மார்க்ஸுக்கு சிலை அமைத்ததற்காக தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

          

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மதசார்பின்மை கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட மாநிலம் தமிழகம். அவர் எத்தனை முறை இங்கு வந்தாலும் அவர்களுக்கு தோல்வி உறுதி. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதியை வாரி வழங்குகிறது. அதே நேரத்தில், தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதியை விடுவிக்காதது கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்களை திமுக கூட்டணியில் கேட்டுப் பெறுவோம். அது எங்களது உரிமை. திமுக கூட்டணியில் ஜனநாயக முறைப்படி கருத்துகள் பரிமாற்றம் உள்ளது. திமுகவிடம் சிலவற்றை கேட்போம்; சிலவற்றை தவிர்ப்போம். அதே நேரத்தில், ‘மதவாத பாஜகவின் எதிர்ப்பு’ என்ற ஒற்றைப் புள்ளியில் நாங்கள் ஒன்றிணைகிறோம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT