உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

 
தமிழகம்

பள்ளிகளின் பெயர்களில் சாதிய அடையாளத்தை அகற்ற கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த ராகுல் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த பொதுநல மனுவில் விருதுநகர், ராமநாத​புரம் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் பெரும்​பாலான பள்ளிகள், விடுதிகள் சாதியபெயர்​களு​டனேயே இயங்குகின்றன. இந்த சாதிய பெயர்​கள் நீக்​க உத்தரவிட வேண்டும் எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் பரத சக்​கர​வர்த்​தி, பூர்​ணிமா அமர்​வு, வழக்கு தொடர்​பாக தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர், ஆதி​தி​ரா​விட நலத்​துறை இயக்​குநர் பதில்​மனு தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு,வழக்கை வரும் 22-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT