தமிழகம்

கோயில் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க உடந்தை: செயல் அலுவலரின் பணிநீக்கத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அம்​மன் கோயிலுக்​கு சொந்​த​மான பல கோடி ரூபாய் மதிப்​புள்ள 20.4 ஏக்​கர் நிலத்தை தனி நபர்​களின் பெயர்​களில் பட்டா மாறுதல் செய்ய ஆட்​சேபனை​யில்லா சான்று அளித்த கோயில் செயல் அலு​வலரின் பணிநீக்​கத்தை ரத்து செய்ய மறுத்​து​விட்ட உயர் நீதி​மன்​றம், நிலம் மீட்பு குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கோவை வட​வள்​ளி​யில் உள்ள மதிப்​பாநல்​லூர் அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான பல கோடி ரூபாய் மதிப்​புள்ள 20.4 ஏக்​கர் நிலத்தை தனி நபர்​களின் பெயர்​களில் பட்டா மாறுதல் செய்ய ஆட்​சேபனை​யில்லா சான்று அளித்து உடந்தையாக செயல்​பட்​ட​தாக அந்​தக் கோயி​லின் செயல் அலு​வலர் ராமகிருஷ்​ணன் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டது.

அது​தொடர்​பான விசா​ரணைக்​குப்​பிறகு அவரை பணிநீக்​கம் செய்து அறநிலை​யத்துறை ஆணை​யர் 2014-ம் ஆண்டு உத்​தர​விட்​டார். இதை எதிர்த்து ராமகிருஷ்​ணன், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இதை விசா​ரித்த நீதிபதி கே.கோவிந்​த​ராஜன், கோயில் நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த கோயில் செயல் அலு​வலரின் பணி நீக்​கம் சரியானதுதான் என்​ப​தால் அதில் தலை​யிட விரும்​பவில்லை.

மேலும், முறைகேடாக தனி நபர்​களின் பெயர்​களுக்கு பட்டா மாறுதல் செய்​யப்​பட்ட கோயில் நிலத்தை மீட்​க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறநிலை​யத் துறை அதி​காரி​கள் அக்.28-க்​ குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணையை அக்.30-க்கு தள்​ளிவைத்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT