தமிழகம்

ஜெம் வீரமணி வழக்கில் புகார்: 2 அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி - திமுக மனு மீது நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ஜெம் வீரமணி வழக்​கில் திமுகவை இணைத்​துப் பேசிய அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ஆதவ் அர்​ஜூனா மற்​றும் தவெக ஐடி பிரி​வுக்கு எதி​ராக ரூ.1 கோடியே 1 லட்​சம் மானநஷ்டஈடு கோரி அவதூறு வழக்​குத்​தொடர திமுக​வுக்கு அனு​ம​தி​யளித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்ட ஜெம் கிரானைட் உரிமை​யாள​ரான வீரமணிக்கு எதி​ரான வழக்​கில் முந்​தைய திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்​காமல் அவரை தப்​பிக்க விட்​ட​தாக தவெக அமைச்​சர்​களான சிடிஆர்​.நிர்​மல்​கு​மார், ஆதவ் அர்​ஜூனா ஆகி​யோர் குற்​றம் சாட்டி பேசி​யிருந்​தனர். இதே​போல தவெக தகவல்​தொழில்​நுட்ப பிரி​வும் இந்த விவ​காரத்​தில் திமுகவை குற்​றம் சாட்டி சமூக வலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டிருந்​தது.

தவெக அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ஆதவ் அர்​ஜூனா மற்​றும் தவெக ஐடி பிரி​வின் இத்​தகைய செயல் திமுக​வுக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் உள்​ள​தாக​வும், எனவே திமுக​வுக்கு எதி​ராக அவதூறான கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்​டும் என்​றும், ரூ.1 கோடியே 1 லட்​சத்தை மான நஷ்டஈ​டாக வழங்க உத்​தர​விட வேண்​டும் எனக்​கோரி திமுக பொதுச் செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான துரை​முரு​கன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், சிறுமிகளை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​ய​தாக ஜெம் வீரமணிக்கு எதி​ராக கடந்​தாண்டு அக்​டோபர் 6 அன்று புகார் பெறப்​பட்ட நிலை​யில் எவ்​வித தாமத​முமின்றி மறு​நாளே வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது என்​றும், இதில் எவ்​வித அரசி​யல் தலை​யீடும் இல்​லாமல் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது என்​றும், உண்​மைக்கு மாறாக திமுக​வுக்கு எதி​ராக சமூக வலை​தளத்​தில் பதி​விடப்​பட்​டுள்ள அவதூறு கருத்​துக்​களை நீக்க உத்​தர​விட வேண்​டும் என்​றும், இதுதொடர்​பாக அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ஆதவ் அர்​ஜூனா மற்​றும் தவெக ஐடி பிரி​வுக்கு எதி​ராக வழக்கு தொடர அனு​ம​தி​யளிக்க வேண்​டும் என்​றும் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ஜி. தில​கவதி முன்​பாக ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, அமைச்​சர்​களுக்கு எதி​ராக வழக்​குத் தொடர வேண்​டுமென்​றால் முன்​கூட்​டியே சட்ட ரீதி​யாக நோட்​டீஸ் வழங்​கி​யிருக்க வேண்​டும். அது​போல எவ்​வித நோட்​டீஸூம் வழங்​காமல் தொடரப்​பட்​டுள்ள இந்த வழக்கு விசா​ரணைக்கு உகந்​ததல்ல என்​ப​தால் தள்​ளு​படி செய்ய வேண்​டும், என வாதிட்​டார்.

அப்​போது, திமுக சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜெ. ரவீந்​திரன், இந்த வழக்கை அமைச்​சர்​கள் என்ற முறை​யில் தொட​ரா​மல், தனி நபர்​கள் என்ற முறை​யிலேயே தொடர்ந்​துள்​ள​தாக தெரி​வித்​தார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி திமுக​வின் மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில் நீதிபதி கே.ஜி.​தில​கவதி நேற்று பிறப்​பித்த உத்​தர​வில், ஜெம் வீரமணி வழக்​கில் திமுகவை இணைத்​துப் பேசி​ய​தாக தமிழக அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ஆதவ் அர்​ஜூனா மற்​றும் தவெக ஐடி பிரி​வுக்கு எதி​ராக திமுக சார்​பில் ரூ.1 கோடியே 1 லட்​சம் மானநஷ்டஈடு கோரி அவதூறு வழக்​குத் தொடர அனு​ம​தி​யளித்து உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT