தமிழகம்

குற்ற வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாய வழிமுறை​ என்ன? - சுற்றறிக்கை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: குற்ற வழக்​கு​களில் ஒரு​வரை கைது செய்​யும்​போது போலீ​ஸார் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​படி கடைபிடிக்க வேண்​டிய கட்​டாய வழி​முறை​கள் என்ன என்​பது குறித்து அனைத்து காவல் நிலை​யங்​களுக்​கும் டிஜிபி சுற்​றறிக்கை பிறப்​பிக்க வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மற்​றும் கோவை​யில் பல்​வேறு இடங்​களில் செயல்​பட்டு வந்த ஃபிட்ஜி என்ற தனி​யார் கல்வி பயிற்சி மையங்​கள் கடந்த ஆண்டு எவ்​வித முன்​னறி​விப்​புமின்றி மூடப்​பட்​டன. அந்த மையத்​தில் பயின்ற மாணவர்​களிடம் வசூலிக்​கப்​பட்ட கல்விக் கட்​ட​ணம், முன்​வைப்​புத் தொகையை திருப்​பித் தரவில்லை என பாதிக்​கப்​பட்ட 533 பெற்​றோர் போலீ​ஸில் புகார் அளித்​தனர்.

அதன்​பேரில் ரூ. 10.63 கோடியை மோசடி செய்​த​தாக அந்த மையத்​தின் தமிழக நிர்​வாக பங்​கு​தா​ர​ரான அங்​குர் குமார் ஜெயின் என்​பவரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கடந்த ஜூலை மாதம் கைது செய்​தனர்.

அங்​குர் குமார் ஜெயினுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு, நீதிபதி என்​.ரமேஷ் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஏ.ரமேஷ் மற்​றும் வழக்​கறிஞர் ஆர்​.அஸ்​வின் ஆகியோர், “மனு​தா​ரர் மாற்​றுத்​திற​னாளி.

அவரது செயற்கை கால் சேதமடைந்து சிறை​யில் நடமாட முடி​யாத நிலை​யில் உள்​ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்​டும்” என வாதிட்​டனர். ஜாமீனவழங்கக்கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி என்​.ரமேஷ் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த வழக்​கிலும் கைது நடவடிக்கை உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களுக்கு முரணாக​வும், இயந்​திரத்​தன​மாக​வும் உள்​ளது.

ஒரு​வரை கைது செய்​யும்​போது அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் பிரிவு 22(1)-ன்​படி கடைபிடிக்க வேண்​டிய கட்​டாய வழி​முறை​கள் என்ன என்​பது குறித்து அனைத்து காவல் நிலை​யங்​களுக்​கும் டிஜிபி சுற்​றறிக்கை பிறப்​பிக்க வேண்​டும்.

இந்த உத்​தரவை அமல்​படுத்​தி​யது தொடர்​பான அறிக்​கையை தமிழக டிஜிபி வரும் நவ.10-ம் தேதி தாக்​கல் செய்ய வேண்​டும்” இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி, மனு​தா​ரருக்​கு நிபந்​தனை ஜாமீன்​ அளித்​து, வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தார்​.

SCROLL FOR NEXT