தமிழகம்

பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றியை எதிர்த்து வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்​கில் முதல்​வர் விஜய் வெற்றி பெற்​றதை எதிர்த்து தொடரப்​பட்ட தேர்​தல் வழக்​கு​களில், விஜய் மற்​றும் தேர்​தல் ஆணை​யம் உள்​ளிட்​டோர் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தவெக தலை​வர் விஜய், சென்னை பெரம்​பூர் தொகு​தி​யிலும், திருச்சி கிழக்​கிலும் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். இந்​நிலை​யில் பெரம்​பூர் தொகு​தி​யில் வெற்றி பெற்​றதை எதிர்த்து திமுக சார்​பில் போட்​டி​யிட்ட ஆர்​.டி.சேகர் மற்​றும்

அத்​தொகுதி வாக்​காளர்​களான தினேஷ், லட்​சுமி நரசிம்​மன் ஆகியோர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்​குகளைத் தொடர்ந்​திருந்​தனர். இதே​போல திருச்சி கிழக்​கில் விஜய் வெற்றி பெற்​றதை எதிர்த்து திமுக வேட்​பாள​ரான இனிகோ இருதய​ராஜும் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்​கு​கள் மீதான விசா​ரணை, நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக நேற்று நடை​பெற்​றது. வழக்கை விசா​ரித்த நீதிபதி இதுதொடர்​பாக முதல்​வர் விஜய் மற்​றும் தேர்​தல் ஆணை​யம் உள்​ளிட்​டோர் 3 வாரங்​களில் பதில் அளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை தள்​ளி​வைத்​துள்​ளார்.

இதே​போல, வில்​லி​வாக்​கம் தொகு​தி​யில் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா வெற்றி பெற்​றதை எதிர்த்து திமுக வேட்​பாளர் கார்த்​திக் மோகன் மற்​றும் சிவ​ராஜ் ஆகியோர் தாக்​கல் செய்​திருந்த தேர்​தல் வழக்​கு​களை விசா​ரித்த நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், இதுதொடர்​பாக ஆதவ் அர்​ஜுனா மற்​றும் தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் 3 வாரங்​களில் பதிலளிக்க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT