பல்​கலைக்​கழக துணைவேந்தர் நியமன பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் பி.விஸ்வநாதன் நம்பிக்கை

பல்​கலைக்​கழக துணைவேந்தர் நியமன பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் பி.விஸ்வநாதன் நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை: பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​கள் நியமன பிரச்​சினைக்கு விரை​வில் தீர்வு காணப்​படும் என உயர்​கல்வி அமைச்​சர் பி.​விஸ்வ​நாதன் நம்​பிக்கை தெரி​வித்​தார். துணை வேந்​தர் தேடு​தல் குழு​வில் 3 பேருக்​குப் பதில் 5 பேர் இடம்​பெறலாம் என்​றும் அவர் கூறி​னார்.

சென்னை தரமணி​யில் உள்ள டாக்​டர் தர்​மாம்​பாள் அரசு மகளிர் பாலிடெக்​னிக் கல்​லூரி​யில் உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் நேற்று மாலை ஆய்வு மேற்​கொண்​டார். கல்​லூரி உள்​கட்​டமைப்பு வசதி, மாணவி​கள் விடு​தி, உணவு மற்​றும் கழிப்​பறை வசதி​கள், படித்து முடிக்​கும் மாணவி​களின் வேலை​வாய்ப்பு குறித்து முதல்​வர் மற்​றும் ஆசிரியர்​களிடம் கேட்​டறிந்​தார். இதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் விஸ்​வநாதன் கூறிய​தாவது:

100 சதவீதம் வேலைவாய்ப்பு

டாக்​டர் தர்​மாம்​பாள் அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​யில் படிக்​கும் மாணவி​களுக்கு 100 சதவீதம் வேலை​வாய்ப்பு கிடைப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. சிவில், கட்​டிடக்​கலை, இன்​பர்​மேஷன் டெக்​னாலஜி பாடப்​பிரிவு​களில் பெரிய பெரிய நிறு​வனங்​கள் வந்து கேம்​பஸ் இண்​டர்​வியூ மூலம் மாணவி​களை வேலைக்கு சேர்க்​கிறார்​கள் என்ற செய்தி மிகுந்த மனநிறைவை தரு​கிறது.

அரசியல் தலையீடு இருக்காது

அரசு கல்​லூரி உதவி பேராசிரியர் தேர்வு விவ​காரம் குறித்து கேட்​கிறீர்​கள். இந்த தேர்​வில் ஆங்​காங்கே சிறிய குளறு​படிகள் நடந்​திருப்​ப​தாக தகவல் வரு​கிறது. இதுதொடர்​பாக ஆலோ​சனை செய்து வரு​கிறோம்.

ஆசிரியர் தேர்வு வாரி​யம் என்​பது சுதந்​திர​மாக செயல்​படக்​கூடிய ஒரு வாரி​யம். அதில் எந்​த​வித​மான அரசி​யல் தலை​யீடும் இருக்​காது. உதவி பேராசிரியர் தேர்​வில் பிரச்​சினை​கள் தீர்வு காணப்​பட்​டதும் அடுத்த தேர்வு பணி​களை தொடங்க உள்​ளோம்.

பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமன பிரச்​சினை குறித்து கேட்​கிறீர்​கள். துணைவேந்​தர் நியமன விவ​காரம் தொடர்​பாக முதல்​வர் நேற்று கூட விரி​வாக ஆய்​வுக்​கூட்​டம் நடத்​தி​னார்.

துணைவேந்​தர் நியமன பிரச்​சினை விரை​வில் தீர்க்​கப்​படும். துணைவேந்​தர் தேடு​தல் குழு​வில் முன்பு 3 பேர் அதாவது, ஆளுநரின் பிர​தி​நி​தி, சிண்​டிகேட் பிர​தி​நி​தி, அரசு பிர​தி​நிதி என மூவர் இடம்​பெற்​றனர். முன்​னாள் ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, கூடு​தலாக யுஜிசி பிர​தி​நிதி ஒரு​வரும் தேடு​தல் குழு​வில் இடம்​பெற வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

மூவர் குழு என்​பது ஐவர் குழு​வாக விரை​வில் மாற்​றியமைக்​கப்​படலாம் என செய்தி வந்த வண்​ணம் உள்​ளது. ஐவர் குழு அமைக்​கப்​பட்​டதும் பல்​கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர்​கள் நியமிக்​கப்​படு​வர் என நம்​பிக்கை அரசுக்கு உள்​ளது. காலம்​ கால​மாக பல்​கலைக்​கழக வேந்​த​ராக ஆளுநரே இருந்து வரு​கிறார். வேந்​த​ராக தமிழக முதல்​வர் இருக்க வேண்​டும் என்று அரசு சார்​பில் கோரிக்கை முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர்​ கூறி​னார்​.

பல்​கலைக்​கழக துணைவேந்தர் நியமன பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் பி.விஸ்வநாதன் நம்பிக்கை
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in