தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஜூன் 22-க்குள் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சியில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் தமிழக அரசின் நிலைப்​பாட்டை ஜூன் 22-க்குள் தெரிவிக்க நீதிப​தி​கள் உத்​தர​விட்டுள்ளனர்.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணி​யில் கார்த்​திகை தீபம் ஏற்ற அனும​திக்கக் கோரி மதுரை எழு​மலையை சேர்ந்த ராம.ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் விசா​ரித்​து, மலை உச்​சி​யில் இருப்​பது தீபத்​தூண்​தான். கார்த்திகை நாளில் தீபத்​தூணில் தீபம் ஏற்​றலாம் என உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவு நிறைவேற்​றப்ப​டாத நிலை​யில் மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர், கோயில் செயல் அலுவலருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனுக்கள் தாக்​கல் செய்​யப்பட்​டன. இந்த மனுக்​களை விசா​ரித்து தனி நீதிபதி பல்​வேறு உத்​தர​வு​களை பிறப்​பித்​தார்.

இந்​நிலை​யில் தனி நீதிபதி பிர​தான மனு​வில் பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக​வும், நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குகளில் பிறப்​பித்த உத்​தர​வு​களுக்கு எதி​ராக​வும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அரசு சார்​பிலும், அதி​காரி​கள் தரப்​பிலும் மேல்​முறை​யீடு மனுக்கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

மனுக்​களை விசா​ரித்த இரு நீதிப​தி​கள் அமர்வு, தனி நீதிப​தி​யின் அனைத்து உத்​தர​வு​களுக்​கும் இடைக்​காலத் தடை விதித்​தனர். இந்த வழக்கு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், அவம​திப்பு வழக்​கு​கள் ஒரு பக்​கம் இருக்​கட்​டும். தனி நீதிப​தி​யின் உத்​தரவை நடை​முறைப்படுத்த முயற்​சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்களின் உணர்​வுக்கு மதிப்பளிக்க வேண்​டும். நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்படுத்​து​வ​தில் என்ன சிக்​கல் உள்​ளது? என கேள்வி எழுப்​பினர்.

அரசுத் தரப்​பில், உயர் அதி​காரி​களிடம் ஆலோ​சனை நடத்த வேண்டி உள்​ளது எனக் கூறப்​பட்​டது. தர்கா தரப்​பில் தங்​களை​யும் வழக்​கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டுமென்​ப​தில் தமிழக அரசின் முடிவு என்ன? என்​பதை நீதி​மன்​றத்​துக்கு தெரிவிக்க வேண்​டும். தர்கா தரப்பு எதிர்​மனு​தா​ர​ராக சேர்க்​கப்​படு​கிறது. தனி நீதிப​தி​யின் உத்​தர​வுக்கு எதி​ராக ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட தடை நீட்​டிக்​கப்​படு​கிறது எனக் கூறி அடுத்த விசா​ரணையை ஜூன் 22-க்கு தள்​ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT