கேரளத்​தில் தென்​மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னை உள்​ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை

கேரளத்​தில் தென்​மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னை உள்​ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை
Updated on
1 min read

சென்னை: கேரளத்​தில் தென்​மேற்​குப் பரு​வ​மழை நேற்று தொடங்​கியது. இது தமிழகப் பகு​தி​களி​லும் பரவி வரும் நிலையில், சென்​னை, கன்​னி​யாகுமரி, கோவை, நீல​கிரி உள்ளிட்ட 26 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு பரு​வ​மழை கேரளப் பகு​தி​களில் நேற்று தொடங்​கியது. மேலும் தென்​மேற்கு மற்​றும் தென்​கிழக்கு அரபிக்​கடலின் மீத​முள்ள பகு​தி​களி​லும், மத்திய மேற்கு மற்​றும் மத்​திய கிழக்கு அரபிக்​கடலின் சில பகுதிகளி​லும், லட்​சத்​தீவு பகு​தி​களி​லும், கர்​நாடகா மற்​றும் தமிழகத்​தின் சில பகு​தி​களி​லும், தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகுதிகளி​லும், தென்​மேற்​கு, மத்​திய மேற்​கு, மத்​திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களி​லும் நேற்று (ஜூன் 4) முன்​னேறி​யுள்​ளது.

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று ஒருசில இடங்​களி​லும், நாளை முதல் ஜூன் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று (ஜூன் 5), கன்​னி​யாகுமரி, நீல​கிரி, கோவை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிகக் கனமழையும், தென்​காசி மற்​றும் திருநெல்​வேலி மாவட்​டங்​களின் மலைப்​ பகு​தி​கள், தேனி, திண்​டுக்​கல், திருப்​பூர், விருதுநகர், மதுரை, சிவகங்​கை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர், மயிலாடு​துறை, புதுக்​கோட்​டை, சேலம், திரு​வண்​ணா​மலை, சென்​னை, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, விழுப்​புரம், திரு​வள்ளூர், வேலூர், செங்​கல்​பட்டு மற்​றும் ஈரோடு மாவட்​டங்​களி​லும், புதுச்சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கனமழை பெய்​யக்​கூடும். இவ்வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

கேரளத்​தில் தென்​மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னை உள்​ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை
டெல்லியில் ஜூன் 8-ல் நடைபெறும் இண்டியா கூட்டணி கூட்டம்: திமுக புறக்கணிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in