தமிழகம்

பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க வடசென்னையில் 4 புதிய குளங்களை அமைத்துள்ள மாநகராட்சி

செய்திப்பிரிவு

சென்னை: பரு​வ​மழைக்​காலங்​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுக்க வடசென்​னை​யில் 73 லட்​சம் கன அடி வரை நீரை சேமிக்​கும் வகை​யில் 4 புதிய குளங்​களை மாநக​ராட்சி அமைத்​துள்​ளது.

சென்னை மாநக​ராட்சி சார்​பாக அமைக்​கப்​பட்டு வரும் குளங்​களுக்கு செய்​தி​யாளர்​களை நேரில் அழைந்​துச் சென்று மாநக​ராட்சி அதி​காரி​கள் விளக்​கமளித்​தனர்.

அந்த வகை​யில் வடசென்​னை​யில் வியாசர்​பாடி பழைய கூட்​செட் சாலை​யில் ரயில்​வேக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் பரப்​பளவி​லான குளத்தை ரயில்வே துறை​யிடம் அனு​மதி பெற்று 7 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.1.15 கோடி மதிப்​பில் சென்னை மாநக​ராட்சி விரி​வாக்​கம் செய்​துள்​ளது. இந்த குளத்​தில் 10அடி ஆழத்​தில் 1.16 லட்​சம் கன அடி தண்​ணீரைத் தேக்கி வைக்க முடி​யும்.

இதே​போல, திரு​வொற்​றியூர் கார்​கில் நகர் பகு​தி​யில் சாதாரண மழைக்கே பொது​மக்​கள் நிவாரண முகாம்​களுக்கு செல்​லும் நிலை இருந்​தது. அதைத் தடுக்​கும் வகை​யில் தற்​போது அந்த பகு​தி​யில் ரூ.9 கோடி மதிப்​பில் புதிய குளம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. 23 அடி ஆழம் உள்ள இந்த குளத்​தில் 1.05 லட்​சம் கன அடி நீரை சேகரிக்​கலாம்.

முன்​ன​தாக இந்த இடம் கட்​டிடக் கழி​வு​கள் கொட்​டப்​பட்டு பயன்​ப​டா​மல் இருந்​தது. தற்​போது இங்கு புதிய குளம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தக் குளம் நிரம்​பி​னால் இங்கு உள்ள தண்​ணீர் பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் செல்​லும் வகை​யில் மோட்​டார்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் மணலி மண்​டலத்​தில் 135 ஏக்​கர் பரப்​பளவு கொண்ட கடப்​பாக்​கம் ஏரியை ரூ.46 கோடி​யில் சுற்​றுச்​சூழல் பூங்​கா​வாக மாற்​றும் பணியை மாநக​ராட்சி மேற்​கொண்​டுள்​ளது. இப்​பூங்​கா​வில் பொது​மக்​களைக் கவரும் வகை​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மரங்​கள், நடை​பாதை, வண்​ணத்​துப்​பூச்சி பூங்​கா, 2 பறவை​கள் தீவு​கள், செயற்கை நீரூற்று மற்​றும் நடை​பாதை வசதி உள்​ளிட்​டவை அமைக்​கப்பட உள்​ள​தாக மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து மாநக​ராட்சி துணை ஆணை​யர் சிவ கிருஷ்ண​மூர்த்தி கூறிய​தாவது: சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் இந்த ஆண்டு 31 புதிய குளங்​கள் உரு​வாக்​கப்​பட்​டு, 47 குளங்​கள் தூர்​வாரப்​பட்​டுள்​ளன. மழைக் காலங்​களில் மழை நீரை வெளி​யேற்​றும் பணிக்​காக மட்​டுமல்​லாமல் நிலத்​தடி நீர் மட்​டத்​தை​யும் அதி​கரிக்க குளங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன.

கடந்த ஆண்டு 87 இடங்​கள் மழைநீர் தேங்​கும் இடங்​களாக அடை​யாளம் காணப்​பட்​டன. இந்​தாண்டு 61 இடங்​களில் தண்​ணீர் தேங்​கியது. அதில் பெரும்​பாலான இடங்​களில் ஒரே நாளில் தண்​ணீர் வடிந்​தது. மழைநீர் வெளி​யேற்​று​வதற்கு மழைநீர் வடி​கால் முக்​கிய​மானது. ஆனால் மழைநீர் வடி​கால் மட்​டுமே தீர்வு கிடை​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT