மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன்

 
தமிழகம்

ரூ.44 கோடியில் 36 புதிய பூங்கா, 11 விளையாட்டு திடல்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் பசுமைப் பரப்பை அதி​கரிக்​கும் வகை​யில் முதல் கட்​ட​மாக ரூ.43.98 கோடி​யில் 36 புதிய பூங்​காக்​கள், 11 விளை​யாட்டு திடல்​கள் அமைக்​கப்​பட உள்​ள​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

இது​தொடர்​பாக அவர் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் உள்ள அனைத்து நகர்ப்​புற உள்ளாட்சி அமைப்​பு​களி​லும் அடிப்​படை வசதி​களை மேம்​படுத்​து வதற்​காக 2026-31 கால கட்​டத்​துக்கு ரூ.1.50 லட்​சம் கோடி மதிப்பீட்டில் முதல்​வரின் ஒருங்​கிணைந்த நகர்ப்​புற மேம்​பாட்டு திட்​டம் செயல்​படுத்​தப்​பட உள்​ளது.

ரூ.2,000 கோடி நிதி: இதில் குடிநீர், பாதாளச் சாக்​கடை, சாலைகள் மற்​றும் பொது சுகாதார கட்​டமைப்​புடன் சேர்த்து, நகர்ப்​புற பசுமையாக்​கல் மற்​றும் பொழுதுபோக்கு திறந்​தவெளி​கள் மேம்​பாட்​டுக்​காக மட்​டும் மாநில அளவில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதன் ஒரு பகுதி​யாக, சென்னை மாநக​ராட்​சி​யில் பசுமை பரப்பை அதி​கரிக்​கும் வகை​யில் முதல் கட்​ட​மாக ரூ.34.45 கோடி மதிப்​பீட்​டில் 36 இடங்​களில் புதிய பூங்​காக்​கள் உரு​வாக்​கப்​பட உள்​ளன.

அந்த வகை​யில் கத்​திப்​பாரா - விமான நிலைய நுழைவு பகுதி, மணலி எலந்​தனூர், பெரியார் நகர், அம்​பத்​தூர் சிடிஎச் சாலை, குமரன் நகர், பார்க் சாலை, ஜீவன் பீமா நகர், முகப்​பேர் தொழிற்​பேட்டை, ஈவிஆர் சாலை, நெல்​சன் மாணிக்​கம் சாலை, பீட்​டர்ஸ் சாலை, நெற்​குன்​றம், பெருங்​குடி, சோழிங்​கநல்​லூர் கிழக்கு கடற்​கரை சாலை, கண்​ணகி நகர் உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய பகுதி​களில் இந்த பூங்​காக்​கள் அமைய​வுள்​ளன.

ஒப்​பந்​தப் புள்​ளி​கள்: அதேபோல், விளை​யாட்டு உள்கட்டமைப்பை வலுப்​படுத்​தும் வித​மாக மாதவரம் அமிர்தம்மாள் நகர், அசோகா தெரு, தண்​டை​யார்​பேட்டை அம்பேத்​கர் கலைக் கல்​லூரி வளாகப் பகுதி, ஈஎச் சாலை, மேயர் கிருஷ்ண​மூர்த்தி நகர், கோடம்​பாக்​கம் ஆர்வி நகர், மற்​றும் சோழிங்​கநல்​லூர் சிஎல்​ஆர்ஐ நகர், டிஎன்​எச்​பிஏ சாலை உள்​ளிட்ட தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 11 இடங்​களில் ரூ.9.52 கோடி செல​வில் 11 புதிய விளை​யாட்​டுத் திடல்​கள் அமைக்​கப்​பட உள்​ளன. இப்பணிகளுக்​கான ஒப்​பந்​தப் புள்​ளி​கள் கோரும் நட​வடிக்​கைகள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இவை நிறைவடைந்​தவுடன் களப்​பணிகள் உடனடி​யாகத் தொடங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT