திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன்

 
தமிழகம்

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

சென்னை: கரூர் நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய காரணத்துக்காக திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று (அக்.28) அவருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை மோசடி செய்​த​தாக திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கைது செய்யப்பட்டு விசா​ரணைக்​காக காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு போலீ​ஸார் அழைத்து வந்​தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவ.6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் புழல் சிறை​க்கு அன்​பில் மகேஸை போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது அவரது ஆதர​வாளர்​கள் புழல் சிறை வாயி​லில் திரண்​டனர்.

அப்​போது, திமுகவைச் சேர்ந்த சிலர் கரூர் கூட்ட நெரிசலை ஒப்​பிட்டு விஜய்-க்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக தெரி​கிறது. இது​தொடர்​பான காணொளி வைரலானது. இதையடுத்து புழல் காவல் நிலைய போலீ​ஸார் வேலூர் மாநகராட்சி திமுக கவுன்​சிலரான டீட்டா சரவணன் உள்ளிட்ட சிலர் மீது வழக்​குப் பதிந்தனர்.

இந்​நிலை​யில் விழுப்​புரத்​தில் உள்ள திமுக பிரமுகர் பிரேம் என்​பவர் வீட்​டில் தங்​கி​யிருந்த டீட்டா சரவணனை போலீ​ஸார் நேற்று (அக்.28) கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டீட்டா சரவணனுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT