தமிழகம்

சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41,000 பேருக்கு மே முதல் சம்பள உயர்வு

செய்திப்பிரிவு

சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41 ஆயிரம் பேருக்கு மே மாதம் முதல் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட் டரங்கில் நேற்று நடந்த நிகழ்வில், 115 மருத்துவ அலுவலர்கள், 83 கண் மருத்துவ உதவியாளர்கள், 75 ஆய்வக நுட்புநர்களுக்கு பணி நியமன ஆணைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். 2024-25ம் ஆண்டில் குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

          

பின்னர், அவர் பேசியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டதில் 250 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மார்ச் 11ம் தேதி வழங்க உள்ளார்.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சித்தா, ஆயுஷ் மருத்துவர்கள், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள், தாய் சேய் நல அலுவலர், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், ஆய்வக நுட்புநர்கள், பல் நோக்கு சுகாதாரப் பணியாளர் கள் என 41 ஆயிரம் பேரின் சம்பளம் வரும் மே மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதனால், அரசுக்கு ரூ.169 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

கடந்த 2023- 24ம் நிதி ஆண்டில் இருந்து 2.650 ஆஷா பணியாளர்கள் ஊக்கத் தொகை பெற்று பணியாற்றி வந்தனர். ரூ.1,500- ரூ.2,000 என்று இருந்த ஊக்கத் தொகை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.5,950 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.7,000 வரை கூடுதலாக வழங்கப்பட உள் ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.3.21 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மா.மகேஸ்வரி, தேசிய - நலவாழ்வுக் குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதா ரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோம சுந்தரம், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா, குடும்ப நலத்துறை இயக்குநர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT