கோப்புப் படம்

 
தமிழகம்

தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இதுவரை 183 கோயில்களில் கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

சென்னை: தவெக ஆட்சி பொறுப்​பேற்ற பிறகு இது​வரை 183 கோயில்​களில் கும்​பாபிஷேகம் நடை​பெற்​றுள்​ளது. தமிழகத்​தில் தவெக தலை​வர் விஜய் தலை​மை​யில் புதிய அரசு பதவி​யேற்​றதை தொடர்ந்​து, இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கீழ் உள்ள கோயில்​களில் புனரமைப்​புப் பணி​கள் மற்​றும் கும்​பாபிஷேகங்​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் 43,646 கோயில்​கள், 27 சமணக் கோயில்​கள், 45 மடங்​கள், 83 மடத்​துடன் இணைந்த கோயில்​கள் மற்​றும் 1,330 அறக்​கட்​டளை​கள் நிர்​வகிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

திமுக ஆட்​சிக் காலத்​தில் (2021 - 2026 பிப்​ர​வரி வரை), 20 முதல் 400 ஆண்​டு​களாகக் கும்​பாபிஷேகம் நடை​பெறாத 4,332 கோயில்​கள் கண்​டறியப்​பட்​டு, ரூ.1,190 கோடி மதிப்​பீட்​டில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு கும்​பாபிஷேகம் நடத்தப்​பட்​டது.

தற்​போது தவெக ஆட்​சி​யில், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​ச​ராகப் பொறுப்​பேற்​றுள்ள ரமேஷ், தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் உள்ள கோயில்​களுக்கு நேரடி​யாகச் சென்று ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கிறார்.

இந்​நிலை​யில், தவெக அரசு பொறுப்​பேற்​று, கடந்த மே 14-ம் தேதி முதல் தற்​போது வரை, குறுகிய காலத்​திலேயே 183 கோயில்​களில் புனரமைப்​புப் பணி​கள் முழு​மை​யாக முடிக்​கப்​பட்டு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது.

முந்​தைய ஆட்​சி​யில் தொடங்​கப்​பட்ட ஆன்​மிகப் பணி​களைத் தொய்​வின்​றித் தொடர்​வதோடு, பழமை​யான கோயில்​களின் தொன்மை மாறாமல் பாது​காப்​ப​தில் இந்த அரசு கூடு​தல் கவனம் செலுத்தி வரு​வ​தாகத் துறை வட்​டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறங்காவலர் தேர்வு விண்ணப்பம்

இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டிலுள்ள கோயில்​களில் இது​வரை 9,205 கோயில்​களுக்​குப் பரம்​பரை முறை​சாரா அறங்​காவலர்​களை நியமிக்க விளம்​பரம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி 214 கோயில்​களுக்கு அறங்​காவலர்​களை நியமிக்க அறநிலை​யத்​துறை அறி​விப்பு வெளி​யிட்​டிருந்​தது. இதற்​கான விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்க ஜூலை 22 (நேற்​று) கடைசி நாள் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த காலஅவ​காசத்தை நீட்​டித்து அறநிலை​ யத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது. அதன்​படி, ஆக.12-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்​ணப்​பிக்​கலாம்.

விருப்​ப​முள்​ளவர்​கள் முறை​யான விண்​ணப்​பப் படிவத்​தைப் பூர்த்தி செய்​து, இந்து சமய அறநிலை​யத்​துறையின் இணை​யதளம் வழி​யாகப்பதிவேற்​றம் செய்​ய​லாம். மேலும், சம்​பந்​தப்​பட்ட மண்டல இணை ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேரிலோ அல்​லது அஞ்​சல் மூல​மாகவோ சமர்ப்​பிக்​கலாம் என்​று அறநிலையத்துறை கூறியுள்​ளது.

SCROLL FOR NEXT