சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட், காங்கிரஸ், விசிக கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: தொகுதி மறுவரையறை நாட்டுக்கு எதிரானது என்று திமுகவினர் அப்போது கூறினர். அவர்கள் பின்னால் அனைவரும் சென்றனர். பிரதான சாலைக்கு வந்தவுடன் பின்னால் வந்தவர்களை விட்டுவிட்டுச் சென்றால் எப்படி? பாஜகவின் கைக்குள் திமுகவி னர் சென்று விட்டார்கள் என்பது வருத்தமாக உள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன்: தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எடுத்துள்ள நிலைப்பாடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விடவும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சங்கப் பரிவாரங் களின் சதி அரசியலுக்கு இது துணை போகும். மேலும் ஒரே தேசம் ஒரே நாடு என்ற சதி அரசியலுக்கும் வழிவகுக்கும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்: எந்த அடிப்படையில் பாஜகவின் இந்தத் தொகுதி மறுவரையறைக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்தார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மஜக எதிர்ப்பு: மனிதநேய ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘சட்டம் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், அதை அமல்படுத்துபவர்கள் தவறானவர்களாக இருந்தால்; சட்டமும், விளைவும் தவறாக இருக்கும். அந்த வகையில், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.